
அரியலூர் மாவட்டம் கயர்லாபாத் கிராம நிர்வாக உதவியாளராக உள்ள லட்சுமி என்பவரை விதவை உதவித்தொகை விண்ணப்பம் வழங்கியது சம்பந்தமாக ஏற்பட்ட வாய் தகராறில் மர்ம நபர்கள் லட்சுமியை தகாத வார்த்தையால் திட்டி நேற்று தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த லெட்சுமி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் அரியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து லட்சுமியை தாக்கிய நபர்களை கைது செய்தனர்.இந்நிலையில் கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி அரியலூர் தாலுக்கா அலுவலக நுழைவாயில் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அப்பொழுது கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் உதவியாளர்களை பாதுகாக்கும் வகையில் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் உதவியாளர்கள் மற்றும் வருவாய் துறை சங்கங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply