JJTVNEWSTAMIL

தமிழால் இணைவோம் வாழ்க தமிழ்

தற்போது நடந்து முடிந்த தாராபுரம், மதுராந்தகத்தில் தவெக வேட்பாளர்கள் அபார வெற்றி – பெரியகுளத்தில் உற்சாகக் கொண்டாட்டம்.

தற்போது நடந்து முடிந்த தாராபுரம், மதுராந்தகத்தில் தவெக வேட்பாளர்கள் அபார வெற்றி – பெரியகுளத்தில் உற்சாகக் கொண்டாட்டம்பெரியகுளத்தில் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் தவெகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்!தமிழகத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் இரண்டு தொகுதிகளிலுமே தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்கள் பெரும்பான்மை வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றுள்ளனர்.​பொதுத்தேர்தலைத் தொடர்ந்து வந்த இந்த இடைத்தேர்தலிலும் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி வாகை சூடியுள்ளதை அடுத்து, மாநிலம் முழுவதும் அக்கட்சியினர் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.​இதன் ஒரு பகுதியாக, தேனி மாவட்டம் பெரியகுளத்தில் சட்டமன்ற உறுப்பினர் சபரி ஜங்கரன் தலைமையில் பிரம்மாண்ட வெற்றிக் கொண்டாட்டம் நடைபெற்றது.பெரியகுளம் பழைய பேருந்து நிலையம், காந்தி சிலை மற்றும் தேவர் சிலை உள்ளிட்ட முக்கியப் பகுதிகளுக்குச் சென்ற தவெக நிர்வாகிகள், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.​மேலும், நகரின் முக்கிய வீதிகளின் வழியாக உற்சாக ஊர்வலமாகச் சென்ற கட்சியினர், பட்டாசுகளை வெடித்து இடைத்தேர்தல் வெற்றியைக் கோலாகலமாகக் கொண்டாடினர். இந்த நிகழ்வில் தவெக நகர ஒன்றிய பேரூர் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

குறிப்பு: இந்த வெற்றி கொண்டாட்டத்தின் போது தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் நாளைய பிரதமர் விஜய் வாழ்க என்றும், நிரந்தர முதல்வர் விஜய் வாழ்க என்றும் கோஷமிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *