JJTVNEWSTAMIL

தமிழால் இணைவோம் வாழ்க தமிழ்

உலக உணவு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக உணவு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
குரும்பல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உலக உணவு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

குரும்பல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உலக உணவு தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்தில் (RAWE) பயிலும் மாணவர்கள் உணவு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.இந்நிகழ்ச்சியில் சத்தான உணவின் முக்கியத்துவம், சமச்சீர் உணவு, ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் உணவு வீணாவதைத் தடுப்பதன் அவசியம் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.மேலும், ஊட்டச்சத்து குறைபாட்டைத் தவிர்க்கவும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றவும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியின் மூலம் உணவின் முக்கியத்துவம் மற்றும் உணவுப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *