
மத்துரில் மின்வாரியம் சார்பில் சோலார் பேனல் குறித்து விழிப்புணர்வுமத்தூர், அக்.16-கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரில் பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு சோலார் பேனல் அமைப்பது குறித்து, மத்தூர் போச்சம்பள்ளி மின்வாரியம் சார்பில் மத்தூர் தனியார் மண்டபத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.மத்தூர் போச்சம்பள்ளி மின்சார வாரிய செயற்பொறியாளர் கவிதா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மத்தூர் மற்றும் போச்சம்பள்ளி சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு சோலார் பேனல் அமைப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டத்தில் பங்கேற்றனர்.இந்த விழிப்புணர்வு கூட்டத்தில், சோலார் பேனல் எவ்வாறு அமைக்க வேண்டும், அரசு மானியம் எவ்வாறு பெறுவது, வங்கிக் கடன் பெறுவது, சோலார் பேனலை எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் இத்திட்டத்தின் பயன்கள் குறித்து அதிகாரிகள் பொதுமக்களுக்கு எடுத்துக் கூறினர்.இக்கூட்டத்தில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

Leave a Reply