JJTVNEWSTAMIL

தமிழால் இணைவோம் வாழ்க தமிழ்

ஆவணி முதல் ஞாயிற்றுக்கிழமை: நாகராஜா கோவிலில் பக்தர்களுக்கு நீர்மோர்

ஆவணி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாகர்கோவில் நாகராஜா கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் நாகராஜா கோவிலுக்கு வரும் பக்தர்களின் தாகத்தை தணிக்கும் வகையில் ஆண்டுதோறும் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் நீர்மோர் வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, ஆவணி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியை தமிழக வெற்றிக் கழகத்தின் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் மாதவன் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட இணைச் செயலாளர் பிரேம்குமார், நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலர் அக்ஷயா கண்ணன், நாகராஜா கோவில் கண்காணிப்பாளர் ஜெயசுதா, அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் டவுன் கிளை தலைவர் ஜோதிகுமார், செயலாளர் முருகன், பொருளாளர் ஐயப்பன், துணைச் செயலாளர் சந்திரகாசன், துணைத் தலைவர் கணேசன் மற்றும் உறுப்பினர்கள் சிவராமன், முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *