JJTVNEWSTAMIL

தமிழால் இணைவோம் வாழ்க தமிழ்

சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் மோடி விமான நிலையத்தில் முதல்வர் விஜய் எடப்பாடி பழனிச்சாமி வரவேற்பு விமான நிலையத்திற்கு வெளியே பிரதமர் மோடி ரோடு ஷோ.

சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் மோடி விமான நிலையத்தில் முதல்வர் விஜய் எடப்பாடி பழனிச்சாமி வரவேற்பு விமான நிலையத்திற்கு வெளியே பிரதமர் மோடி ரோடு ஷோபிரதமர் நரேந்திர மோடி ஒருநாள் பயணமாக இன்று டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு தமிழக முதலமைச்சர் விஜய், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.சென்னை வந்து உள்ள பிரதமர் மோடியின் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் பூந்தமல்லி – வடபழனி இடையிலான வழித்தடத்தைத் தொடங்கி வைக்கிறார். சுமார் ரூ.4,900 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த வழித்தடத்தில் 11 மெட்ரோ ரயில் நிலையங்கள் இடம்பெற்றுள்ளன.இதற்காக போரூர் புறவழிச்சாலை மெட்ரோ நிலையத்துக்குச் செல்லும் பிரதமர், அங்கிருந்து மெட்ரோ ரயிலில் பூந்தமல்லி புறவழிச்சாலை நிலையம் வரை பயணம் செய்து மீண்டும் திரும்புகிறார். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜயும் பங்கேற்க உள்ளார். புதிய வழித்தடம் பயன்பாட்டுக்கு வருவதன் மூலம் சென்னையின் மேற்குப் பகுதிகளுக்கான போக்குவரத்து வசதி மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.மெட்ரோ ரயில் நிகழ்ச்சியைத் தொடர்ந்து, போரூர் ஏரிக்கு அருகிலுள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி தரிசனம் செய்து வழிபடத் திட்டமிடப்பட்டுள்ளதுஇதையடுத்து, கிண்டியில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகமான ஐஐடி சென்னைக்குச் செல்லும் பிரதமர், அங்குள்ள சுதா கோபாலகிருஷ்ணன் மூளை ஆராய்ச்சி மையத்தைப் பார்வையிடுகிறார். மூளை தொடர்பான ஆராய்ச்சிகளில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து அவர் பார்வையிட உள்ளார்.இதற்காக இன்று சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் விஜய் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விமான நிலையத்தில் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர் மேலும் விமான நிலையத்திற்கு வெளியே வந்த பிறகு மோடி அங்கு திறந்திருந்த பொதுமக்கள் பாஜக தொடர்களை காரில் இருந்து நின்றபடி கையால் சிரித்து கொண்டு சென்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *