
மதுராந்தகம் அருகே தாய்மாமன்
தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் 50 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிப்பு, மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் சரத்குமார் கலந்துகொண்டு குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தார்.50 தங்க மோதிரம் அணிவித்த அமைச்சருக்கு 50 ரோஜாக்கள் கொடுத்து வரவேற்ற அப்பகுதி மக்கள்.தமிழக அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம், மதுரையில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் மாதம் தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்.இந்நிலையில், மதுராந்தகம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றதால் இத்திட்டம் அங்கு செயல்படுத்தப்படவில்லை. தற்போது, இடைத்தேர்தல் நடைபெற்று ஆளுங்கட்சியான தவெக சார்பில் போட்டியிட்ட மரகதம் குமரவேல் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார். இதனால், தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தப்பட்டதால், அரசின் திட்டங்கள் வழக்கம் போல் இந்த தொகுதியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில், சித்தாமூர் ஒன்றியத்துக்குட்பட்ட பொலம்பாக்கம் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், தமிழக அரசின் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது., இதில், தமிழக மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் சரத்குமார் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, மேற்கண்ட திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும், 50 குழந்தைகளுக்கு மேற்கண்ட திட்டத்தில் தங்க மோதிரத்தை அணிவித்தார்.50 தங்க மோதிரம் குழந்தை களுக்கு அணிவித்த அமைச்சருக்கு 50 ரோஜாக்கள் கொடுத்து உற்சாகமாக வரவேற்க கிராம மக்கள்இந்நிகழ்ச்சியில்,
மருத்துவப் பணியாளர்கள்மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply