JJTVNEWSTAMIL

தமிழால் இணைவோம் வாழ்க தமிழ்

மலேசியா கோலாலம்பூர் சர்வதேச சிலம்பம், கராத்தே போட்டியில் சென்னை சேர்ந்த வீரர்கள் தங்கம், வெள்ளி, வெங்கல பதக்கம் வென்று சாதனை

மலேசியா கோலாலம்பூர் சர்வதேச சிலம்பம், கராத்தே போட்டியில் சென்னை சேர்ந்த வீரர்கள் தங்கம், வெள்ளி, வெங்கல பதக்கம் வென்று சாதனைவிமான நிலையம் வந்தடைந்த வீரர்களுக்கு நண்பர்கள், உறவினர்கள் சந்தணமாலை, சால்வை, பூங்கொத்து வழங்கி உற்ச்சாக வரவேற்புமலேசியா கோலாலம்பூரில் சர்வதேச அளவில் சிலம்பம் காரத்தே போட்டிகள் நடைபெற்றது இந்த போட்டிகளில் தமிழகத்தை சேர்ந்த ட்ரீம் கேட்சர் அகடமியின் நிறுவனர், பயிற்சியாளருமான முத்துகுமார், சேலஞ்சர் ஸ்போர்ட்ஸ் அகடமியின் நிறுவனர், பயிற்சியாளருமான சுரேஷ் மற்றும் வேல்பாரி அகடமியின் நிறுவனர், பயிற்ச்சியாளருமான கதிரவன் ஆகியோர் தலைமையில் 18 வீரர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் இந்தியா, சிங்கப்பூர், மலேஷியா உள்ளிட்ட 5 நாடுகள் கலந்து கொண்டன. நடைபெற்ற சிலம்பம் போட்டியில் 7 தங்கபதக்கம், 3 வெள்ளி, 5 வெங்கல பதக்கம் வென்றும், கராத்தே போட்டியில் 2 தங்கபதக்கமும், 3 வெள்ளி மற்றும் வெங்கல பதக்கம் வென்று சாதனை படைத்து சென்னை விமான நிலையம் வந்த வீரர்களுக்கு உறவினர்கள், நண்பர்கள் பூங்கொத்து வழங்கியும், சந்தணமாலை, சால்வை அணிவித்து உற்ச்சாக வரவேற்பு அளித்து வாழ்த்து தெரிவித்தனர்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பயிற்ச்சியாளர் முத்து குமார் பேசுகையில் மலேசியா சென்று எங்கள் மாணவர்கள் சிலம்பம், கராத்தே போட்டியில் வென்று பதக்கங்கள் பெற்றது மகிழ்ச்சியை அளிக்கிறது எனவும் அனைத்து மாணவர்களும் தற்காப்பு கலையை கற்பதில் ஆர்வம் இருந்தாலும் வெளிநாடுகளுக்கு சென்றுவர செலவுகள் என கூறும்போது எல்ல பெற்றோர்களாலும் அதை செய்யமுடியாது, இத்தனை பதக்கம் வாங்கியது மகிழ்ச்சியாக இருந்தாலும் சிலம்ப கலையில் இன்னும் சாதனை செய்யவேண்டும் என்றும் தமிழக அரசு 3 சதவீதம் சிலம்பத்திற்கு அறிவித்தாலும் அது எந்த முறையில் செயல்பாட்டில் உள்ளது எனவெளிபடையாக தெரிந்தால் மட்டுமே சிலம்பத்திற்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *