
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக விவசாயிகள் தினத்தை முன்னிட்டு கருத்தரங்கம் நடைபெற்றதுதேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையக் கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் சர்வதேச மகளிர் விவசாயிகள் தினத்தை முன்னிட்டு உழவர் மேளா
வேளாண் கருத்தரங்கம் மற்றும் வேளாண் கண்காட்சி தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமையில் நடைபெற்றதுநமது தேனி மாவட்டம் வேளாண்மைக்கு முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டமாகும். இம்மாவட்டத்தில் நிலவும் இயற்கைச் சூழல் நீர்வள ஆதாரங்கள் காரணமாக திராட்சை தென்னை வாழை நெல் கரும்பு ஏலக்காய் மிளகு உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக திராட்சை மற்றும் வாழை சாகுபடி சிறப்பாக நடைபெற்று வருகின்றது.வேளாண்மையை அடிப்படையாகக் கொண்டு மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சியில் விவசாயிகள் முக்கியப் பங்காற்றி வருகின்றனர். இதில் பெண்களும் விவசாயப் பணிகளில் ஈடுபடுவதுடன் பயிர் சாகுபடி அறுவடை விளைபொருட்களைச் சந்தைப்படுத்துதல் மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளிலும் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர்.பெண் விவசாயிகளின் உழைப்பையும் வேளாண் துறையில் அவர்களின் பங்களிப்பையும் அங்கீகரித்து அவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த ஆண்டு முதல் அக்டோபர் 15-ஆம் தேதி சர்வதேச மகளிர் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.தேனி மாவட்டத்தில் பெண் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் வேளாண் விளைபொருட்களை நேரடியாக விற்பனை செய்வதுடன் அவற்றை மதிப்புக் கூட்டப்பட்டப் பொருட்களாக மாற்றி விற்பனை செய்வதன் மூலமும் கூடுதல் வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.பெண் விவசாயிகள் மற்றும் பெண் தொழில்முனைவோர் தயாரிக்கும் வேளாண் சார்ந்த மதிப்புக் கூட்டப்பட்டப் பொருட்களுக்குச் சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதும்இ அவர்களின் தயாரிப்புகளைப் பொதுமக்கள் எளிதில் வாங்கிப் பயன்படுத்தும் வகையில் விற்பனை வாய்ப்புகளை விரிவுபடுத்துவதும் அவசியமாகும். இதற்காக அவர்களின் தயாரிப்புகளைப் பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும்இ பெண் தொழில்முனைவோர் தயாரிக்கும் வேளாண் சார்ந்த மதிப்புக் கூட்டப்பட்டப் பொருட்களை அரசு அலுவலகங்களில் வாங்க செய்வதற்கும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.அதனைத்தொடர்ந்து வேளாண்மையில் சிறந்து செயலாற்றி 2 பெண் விவசாயிகள் மற்றும் 2 தொழில் முனைவோர்களுக்கு கேடயங்களையும் 4 பெண் விவசாயிகளுக்கு ரூ.29500 மானியத்தில் கையடக்க விதைப்பான் விசைதெளிப்பான் மக்காச்சோள விதைத்தொகுப்பு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.முன்னதாக வேளாண் பெருமக்கள் பயன்பெறும் வகையில் வேளாண்மைத்துறை வேளாண்மை தொழில்நுட்ப கல்லூரிகள் வேளாண் ஆராய்ச்சி நிலையம் அகியவற்றின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த வேளாண் சார்ந்த தொழில்நுட்ப விளக்கக் கண்காட்சிகளையும் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தின் மூலமாக வேளாண் சார்ந்த சுயதொழில் பயிற்சி பெற்ற தொழில்முனைவோர்கள் மூலமாக அமைக்கப்பட்டிருந்த மதிப்புக் கூட்டப்பட்டப் பொருட்களின் விற்பனைக் கண்காட்சிகளையும் தேனி பாராளுமன்ற உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார்.இந்த கருத்தரங்கத்தில் துறை சார்ந்த அதிகாரிகள் விவசாயிகள் பொதுமக்கள் மகளிர் சுய உதவி குழுக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Leave a Reply