JJTVNEWSTAMIL

தமிழால் இணைவோம் வாழ்க தமிழ்

மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு 52,53,774 ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்

மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு 52,53,774 ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தா.பழூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அணைக்குடம் கிராமத்தில் வருவாய் பேரிடர் மற்றும் மேலாண்மை துறை சார்பில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. முன்னதாக தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் விழுதுகள் அருகாமை சேவை மையத்தினை மாவட்ட ஆட்சியர் மிருணாளினி ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி வைத்து துவக்கி வைத்தார்.மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து விதமான சேவைகளும் வழங்கும் பொருட்டு இ சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கப்படும் அனைத்து ஆவணங்களும் நேரடியாக வழங்கப்பட்டு இம் மையத்தில் கட்டணம் இல்லா விண்ணப்பம் பதிவு செய்யும் சேவை நடைமுறை படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு வட்டாரத்திற்கும் மூன்று சேவை மையங்கள் என அரியலூர் மாவட்டம் முழுவதும் 24 சேவை மையங்கள் அமைக்கப்பட உள்ளன. அரியலூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக 14 விழுதுகள் அருகாமை சேவை மையம் துவங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பின்னர் தொடர்ந்து நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சி தலைவர் மிருணாளினி பொதுமக்களிடம் பேசுகையில் தற்போது மழைக்காலம் ஆரம்பித்து உள்ளது தண்ணீரைக் காய்ச்சி பருகுங்கள் குப்பைகள் தேங்கா மூலம் மழை நீர் தேங்கா மூலம் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள பொதுமக்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். மக்கள் தொடர்பு முகாமில் கலந்து கொண்ட 90 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா, இயற்கை மரணம், முதியோர் உதவித்தொகை, வேளாண்மை துறை, வேளாண் பொறியியல் துறை, மகளிர் உரிமைத்துறை, கூட்டுறவுத்துறை, உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த பயனாளர்களுக்கு ரூபாய் 52 லட்சத்து 53 ஆயிரத்து 774 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அனைத்து துறைகளைச் சார்ந்த அதிகாரிகள் பொதுமக்கள் பயனாளிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *