
தமிழ்நாட்டில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வணிகர்கள், விவசாயிகள், அரசு அலுவலர்கள் கொண்ட குழுவை உடனடியாக முதலமைச்சர் அமைக்க வேண்டும்: கோடிகளை கொட்டி இலவசங்களை தருவதை தவிர்த்து நீராதாரத்தை பெருக்கிட திட்டங்களை தீட்டி வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அரசுக்கு வலியுறுத்தல்அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் பண்டிகை கால சிறப்பு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் தலைவர் விக்ரமராஜா பங்கேற்று, பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்…தமிழ்நாட்டில் தற்பொழுது பண்டிகை காலம் வருவதால் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், வியாபாரிகளை அச்சுறுத்தாமல் தங்களது சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், அரியலூர் பேருந்து நிலைய கடைகளை விரைந்து வாடகைக்கு விட்டு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் வலியுறுத்தினர்.பண்டிகை காலமான ஆயுதபூஜை , தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் காவல்துறையினர், வியாபாரிகளை இரவில் 10 மணிக்கே கடையைப் பூட்டப் சொல்லி வற்புறுத்தக் கூடாது. கடை நடத்தும் வியாபாரிகளுக்கு பாதுகாப்பு தர வேண்டும்.பட்டாசு வியாபாரிகளுக்கான சான்றிதழ்களை விரைவாக தந்து வியாபாரிகள் வணிகம் நடத்த அரசு நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினார்.மேலும் தமிழ்நாடு முழுவதும் ஆன்லைன் வர்த்தகம் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கம் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டுள்ளது. இதனால் சிறு வியாபாரிகள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். உடனடியாக தமிழ்நாடு முதலமைச்சர் ‘சிறப்புப் பாதுகாப்பு சட்டம்’ நிறைவேற்ற வலியுறுத்தினார்.விலைவாசி உயர்வுக்கு மிகப்பெரிய காரணமே வறட்சி தான். தமிழ்நாட்டில் 25 லட்சம் ஏக்கர் விவசாயம் செய்த நிலையில், தற்பொழுது 10 லட்சம் ஏக்கர் அளவில்தான் விவசாயம் செய்யப்படுகிறது. நீர் ஆதாரத்தை பெருக்க அரசு திட்டங்களை வகுக்க வேண்டும்.கோடிகளைக் கொட்டி தரும் இலவசங்களை தவிர்த்து, நீராதாரத்தை பெருக்க அரசு முன்னுரிமை தர வேண்டும்.தமிழ்நாட்டில் விலைவாசியை கட்டுப்படுத்த வணிகர் சங்க பிரதிநிதிகள், விவசாயிகள், அரசுத்துறை அதிகாரிகளை அழைத்து உடனடியாக குழு அமைத்து ஆலோசனை கேட்க வேண்டும் என அரியலூரில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா செய்தியாளரிடம் தெரிவித்தார்.

Leave a Reply