JJTVNEWSTAMIL

தமிழால் இணைவோம் வாழ்க தமிழ்

விலைவாசி என்பது கட்டுக்குள் அடங்காமல் செல்கிறது தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரம் ராஜா பேட்டி

விலைவாசி என்பது கட்டுக்குள் அடங்காமல் செல்கிறது தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரம் ராஜா பேட்டிதமிழகத்தில் நீர் ஆதாரத்தை பெருக்க நிதி ஒதுக்க வேண்டும் நீர் ஆதாரத்தை பெருக்கினால் மட்டும்தான் விவசாயம் செழிக்கும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரம் ராஜா பேட்டிசெங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தனியார் துணிக்கடை திறப்பு விழாவிற்கு வருகை தந்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அப்போது செய்தியாளர்களை சந்தித்து சுகையில்”தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கு 0.4% சேவை வரியை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு முழுவதும் பேரமைப்பினுடைய மாநிலத்தினுடைய ஒவ்வொரு வட்டத்தினுடைய நிர்வாகிகளும் போராடினோம். 12ம் தேதி காலையில் போராட்டம், மாலையில் டெல்லியில் மத்திய அமைச்சரோடு சந்திப்பு, அடுத்த நாள் மாண்புமிகு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் அந்த சட்டத்தை தள்ளி வைத்திருக்கிறார்கள்.இது தற்காலிகம் என்று சொன்னாலும் கூட, ஒட்டுமொத்தமாக, நிரந்தரமாக அதை திரும்ப பெற வேண்டும் என்பதிலே தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு உறுதியாக இருக்கிறது., மாண்புமிகு மத்திய நிதி அமைச்சர் அவர்களுக்கும், மாண்புமிகு பிரதமருக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் ள்கிறோம்.அதேபோன்று இந்த காலச்சூழலில் விலைவாசி என்பது கட்டுக்குள் அடங்காமல் இருக்கிறது. மாண்புமிகு மத்திய நிதி அமைச்சரோடு பேசுகிற பொழுது, அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்கு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இருக்கிறோம்.,ஏனெனில்சர்க்கரை விலை வேகமாக உயர்ந்த பொழுது, சர்க்கரை இறக்குமதி செய்த பிறகுதான் விலை குறைந்தது. அந்த நிலைப்பாட்டை உறுதியாக எடுப்போம் என்று ல்லியிருக்கிறார்கள்.அதேபோன்று இன்று தமிழகத்திலே நீர் ராதாரத்தை பெருக்குவதற்கு மூலக்காரணமான நிதி ஒதுக்கப்பட வேண்டும். எத்தனையோ கோடிகளை நாம் இனாமாக கொடுத்துக் கொண்டிருக்கிறோம். மக்கள் புரிந்து கொள்ள வேண்டும், ‘இனா’ என்ற வாசகத்தை தவிர்க்கப்பட வேண்டும். இந்த நீராதாரத்தை பெருக்கினால் மட்டும்தான் விவசாயம் செழிக்கும், உற்பத்திகள் பெருக்கும், நவதானிய பொருள் கிடைக்கும். இல்லை என்று சொன்னால் எல்லார் வீட்டிலேயும் பணம் இருக்கும், தங்கம் இருக்கும், சாப்பிடுவதற்கு பொருள் இருக்காது என்பதை எச்சரிக்கை உணர்வோடு பதிவு செய்து ள்ளுகிறேன்.ஜிஎஸ்டி வரிவிதிப்பு வந்து ரொம்ப வரி போட்டுருக்காங்க…அதைதற்காலிகமாகத்தான் தள்ளி வச்சிருக்காங்க, நிரந்தரமாக திரும்ப பெற வேண்டும் என்பதில் வலியுறுத்தவும் உறுதியாக இருக்கிறோம்.புதிய முதலமைச்சரை… ஏதாவது மாற்றம் இருக்குதா என்ற கேள்விக்குஇல்லை, சட்டத்திலே நாங்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் புதிதாக பொறுப்பேற்று இருக்கிறார்கள். அவர்களை சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கி கேட்டிருக்கிறோம். குறிப்பாக சாமானிய வணிகர்களை பாதுகாப்பதற்கு சிறப்பு பாதுகாப்பு சட்டம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். ஏன்னா கார்ப்பரேட் கம்பெனியினுடைய ஆதிக்கம் நேத்து கூட பெரிய நிறுவனம் ஒன்று சென்னையில் கடந்து வந்தார்கள். ஒரு அது போன்ற ஒரு நிறுவனம் திறந்தால், பதினைந்து கிலோ மீட்டருக்கு சிறுசிறு வியாபாரிகள் எல்லாம் கடையை மூடக்கூடிய அவலம் ஏற்பட்டு கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான பேர்களுக்கு வேலை தந்து கொண்டிருக்கின்ற சாமானியர்களை பாதுகாப்பதற்கு சிறப்பு பாதுகாப்பு சட்டம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும் என்பதிலே தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு உறுதியாக இருக்கிறது.இந்தியாவிலேயே வந்து வியாபாரிகள் தமிழ்நாட்டில் அதிகமா இருக்கு… தமிழக அரசுக்கு என்ன கோரிக்கை வைக்கிறீர்கள்?தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதை விவசாயிகள், வணிகர்கள் என்ற பிரதிநிதிகளும் அழைத்து ஆலோசனை பெற வேண்டும். நாங்கள் ஆலோசனை வழங்குவதற்கும், விலை குறைப்பதற்கும் என்ன ஆயத்தப்பணி செய்யணுமோ செய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *