
தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பாக தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கத்தினர் தமிழகம் முழுவதும் மக்கள் நல்வாழ்வு துறையில் காலியாக உள்ள 1200க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தியும், தமிழக அரசிற்கு கண்டனத்தை தெரிவிக்கும் வகையிலும் கோஷங்கள் எழுப்பப்பட்டதுதேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு முன்பாகதமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுனர் சங்கத்தினர் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திஇந்த விஷயத்தில் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றதுதமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுனர் சங்க தேனி மாவட்ட தலைவர் மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்தமிழக முழுவதும் மக்கள் நல வாழ்வுத்துறையில் காலியாக உள்ள 1200க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்மக்கள் நல வாழ்வுதுறையில் பதவி உயர்வு பணியிடங்களை உருவாக்கிட வேண்டும்நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவ குறியீட்டின்படி கூடுதல் மருந்தாளுனர்களை உருவாக்க வேண்டும்அனைத்து இயக்குநகரத்திலும் மருந்தாளுனர் மாற்று ஆணையை ரத்து செய்ய வேண்டும்அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முதல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வரை மருந்துகளை உரிய தட்பவெப்ப நிலையில் பராமரித்திட குளிர் பதன வசதிகளுடன் முறையான மருந்து கிடங்குகள் அமைக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டதோடுஇதனை நிறைவேற்றி தர வேண்டுமென தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும்தமிழக அரசுக்கு கண்டனத்தை தெரிவிக்கும் வகையிலும் கோஷங்கள் எழுப்பப்பட்டதுஇந்த ஆர்ப்பாட்டத்தில் தேனி மாவட்டம் முழுவதிலும் இருந்து தமிழ்நாடு அனைத்து அரசு மருந்தாளுனர் சங்கத்தினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

Leave a Reply