
அக்டோபர் 6 ந்தேதி துவங்கி மூன்று நாட்கள் நடைபெற உள்ளதாக ஒருங்கிணைப்பாளர்கள் தகவல்கோவையில் 5-வது பதிப்பாக நடைபெற உள்ள ‘ரா மேட் இந்தியா 2026’ சர்வதேச மூலப்பொருட்கள் மற்றும் உற்பத்தி கண்காட்சி குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு கோவை கொடிசியா அலுவலகத்தில் நடைபெற்றது.இதில் கொடிசியா தலைவர் ரங்கசாமி, கண்காட்சித் தலைவர் ஸ்ரீதர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.அவர்கள் கூறுகையில், கோவை மற்றும் சுற்றுவட்டாரங்களில் உள்ள ஆட்டோமொபைல், ஜவுளி, வார்ப்புத் தொழில், பொறியியல் உள்ளிட்ட உற்பத்தித் துறைகளுக்குத் தேவையான தரமான மூலப்பொருட்களை ஒரே இடத்தில் பெறுவதற்கான வாய்ப்பை இந்தக் கண்காட்சி ஏற்படுத்தும்.இரும்பு, எஃகு, அலுமினியம், செம்பு உள்ளிட்ட உலோகங்கள், பிளாஸ்டிக், ரப்பர், தொழில்துறை வேதிப்பொருட்கள், பொதியிடல் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு மூலப்பொருட்களுடன், மூலப்பொருள் கையாளுதல், கிடங்கு மேலாண்மை, போக்குவரத்து, கழிவு மறுசுழற்சி உள்ளிட்ட தொழில்நுட்பங்களும் இடம்பெற உள்ளன. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மானியத் திட்டங்கள் குறித்த தகவல்களும் வழங்கப்பட உள்ளன.அக்டோபர் 6 முதல் 8-ம் தேதி வரை 3 நாட்கள் கொடிசியா வர்த்தக வளாகத்தில் நடைபெறும் இந்தக் கண்காட்சி, தொழில் நிறுவனங்களுக்கு இடையிலான வர்த்தக வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் நடத்தப்படுகிறது.இதில் தமிழ்நாடு,கேரளா,கர்நாடாகா,குஜராத்,உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பலர் பங்கேற்க உள்ளதாக தெரிவித்தனர்…

Leave a Reply