JJTVNEWSTAMIL

தமிழால் இணைவோம் வாழ்க தமிழ்

ஏற்காட்டில் குடிபோதையில் தவறி விழுந்த சுற்றுலா பயணி பரிதாப பலி

ஏற்காடு-அக்டோபர்-11சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் சரவணன்,59. சங்ககிரி பகுதியில் உள்ள எஸ்.பி.ஐ., வங்கியில் நகை மதிப்பீட்டாளராக வேலை செய்து வரும் இவர் நேற்று தனது நண்பர் ஸ்ரீரங்கனுடன் ஏற்காட்டிற்கு சுற்றுலா வந்து ஏற்காட்டில் இருந்து கொம்மக்காடு செல்லும் சாலையில் உள்ள பிரபல தனியார் தங்கும் விடுதியில் தங்கி மது அருந்தி உள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு 7:50 மணிக்கு சரவணன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயக்க நிலையில் ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த அரசு மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என்பதை உறுதி செய்துள்ளார்.அதைத் தொடர்ந்து தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த ஏற்காடு போலீசார் சரவணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சரவணன் மரணம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சரவணன் மற்றும் அவரது நண்பர் ஸ்ரீரங்கன் இருவரும் தங்கும் விடுதியில் மது அருந்தியதாகவும் சரவணன் அதிக போதையில் அவர் தங்கி இருந்த அறையில் உள்ள கட்டிலின் ஓரத்தில் உள்ள மரக்கட்டை மீது தவறி கீழே விழுந்து பின் மண்டையில் பலத்த காயம் ஏற்பட்டு இறந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஏற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் அமிர்தலிங்கம் சரவணன் மரணம் குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *