JJTVNEWSTAMIL

தமிழால் இணைவோம் வாழ்க தமிழ்

திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி சார்பில் மங்கமனுத்து கிராமத்தில்நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்.

திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி சார்பில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் மங்கமனுத்து கிராமத்தில் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அருட்தந்தை V. ஸ்டீபன் லூர்து பிரகாசம் அவர்களின் வழிகாட்டுதலின்படி 29 – 09 – 26 அன்று போதை ஒழிப்பு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை புனித சந்தியாகப்பர் திருத்தல பங்குத் தந்தை A.தாமஸ் ஜான்பீட்டர் , நல்லாசிரியர் ச.சந்தியாகு ஆகியோர் தொடங்கி வைத்து சிறப்பித்தார்கள். மேலும் இயற்கையை காப்போம் என்ற முழக்கத்துடன் மனித சங்கிலி நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் A.ஜேம்ஸ் சிறப்பாக செய்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *