
திண்டுக்கல்லில் மாநகர மாவட்ட இந்திய தேசிய காங்கிரஸ் (INTUC) தொழிற்சங்கம் சார்பில்
மாநகராட்சி ஆணையாளர் ஜெ. பிரேம் ஆனந்த் சந்திப்பு.திண்டுக்கல்லில் மாநகர மாவட்ட
இந்திய தேசிய காங்கிரஸ் (INTUC) தொழிற்சங்கம் சார்பில் திண்டுக்கல் மாநகர மாவட்ட தலைவர் காளிமுத்து தலைமையில்திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையாளர் ஜெ. பிரேம் ஆனந்த் அவர்களைநேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.மேலும் திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளர் ஜெ.பிரேம் ஆனந்த்
பொறுப்பேற்ற நாட்களிலிருந்து திண்டுக்கல் மாநகரம் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் உள்ளது. திண்டுக்கல் பேருந்து நிலையம் முதல் 48 வார்டுகளிலும் மிக சுத்தமாக உள்ளது என தங்களை வாழ்த்தி வணங்குகின்றோம் என தெரிவித்தனர்.இந்நிகழ்வில் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் செல்வகுமார், திண்டுக்கல் மாவட்ட பொருளாளர் பாண்டி,கௌரவ ஆலோசகர் காளியப்பன் , துணைச் செயலாளர் மாரியம்மாள், கௌரவ ஆலோசகர் ஜி.கே. முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply