
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிக ளிலும் முன்னிட்டு கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வேம்பார்பட்டி ஊராட்சியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்ட நிகழ்ச்சி வேம்பார்பட்டி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் வேம்பார்பட்டி ஊராட்சி செயலர் மார்ட்டின் கென்னடி தீர்மானங்களை வாசித்தார். இந்நிகழ்வில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர் திருமலைச்சாமி, சுகாதார ஆய்வாளர் முனியப்பன் , பொது விநியோகம் அக்கம்மாள், வேளாண்மை துறை அலுவலர், ரேஷன் கடை ஊழியர், அங்கன் வாடி ஊழியர் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் தீர்மானங்களான கிராம ஊராட்சி நிர்வாகம் மற் றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்கப்பட்டது. கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க ப்பட்டது. பொது சுகாதாரம் குறித்தும், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் குறித்தும், ஜல்ஜீவன் இயக்கம் குறித்தும், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) குறித்தும், இதர பொருட்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. ஊர் இதில் முக்கியஸ்தர்கள், சத்து ணவு பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், விவசாயத்துறை,கூட்டுறவுத்துறை, ஊராட்சி பணியாளர்கள், பொதுமக்கள் என சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply