JJTVNEWSTAMIL

தமிழால் இணைவோம் வாழ்க தமிழ்

அகமதாபாத்தில் தேசிய அளவிலான விருச்சுவல் டேக்வாண்டோ போட்டியில் சின்னாளபட்டி ராஜன் அகிலன் வெண்கல பதக்கம் பெற்றார்.

அகமதாபாத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான விருச்சுவல் டேக்வாண்டோ போட்டியில் சின்னாளபட்டி ராஜன் உள் விளையாட்டு அரங்கில் பயிற்சி பெற்ற மாணவர் அகிலன் வெண்கல பதக்கம் பெற்றார்.அகமதாபாத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான விருச்சுவல் டேக்வாண்டோ போட்டியில் சின்னாளபட்டி ராஜன் உள் விளையாட்டு அரங்கில் பயிற்சி பெற்ற மாணவர் அகிலன் வெண்கல பதக்கம் பெற்றார். குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் தேசிய அளவிலான இரண்டாவது விருச்சுவல் டேக்வாண்டோ போட்டியில் அக்டோபர் மாதம் 26, 27 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் தமிழக அணி சார்பாக திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி பிரிவு ராஜன் உள் விளையாட்டு அரங்கில் மாஸ்டர் எம்.பிரேம்நாத் அவர்களிடம் பயிற்சி பெற்ற மாணவர் பி.அகிலன் கலந்து கொண்டார். விருச்சுவல் டேக்வாண்டோ போட்டியில் சிறப்பாக விளையாடி வெண்கல பதக்கம் பெற்று தமிழக அணிக்கு பெருமை சேர்த்துள்ளார். வெற்றி பெற்ற விளையாட்டு வீரர் அகிலனை டேக்வாண்டோ பயிற்சியாளரும், சர்வதேச நடுவருமான மாஸ்டர் எம்.பிரேம்நாத் தலைமையில் நிர்வாகிகள் மாணவர்களின் பெற்றோர்கள் மனதார பாராட்டி வாழ்த்தினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *