JJTVNEWSTAMIL

தமிழால் இணைவோம் வாழ்க தமிழ்

கோவையில் மின்னணுக் கழிவுகள் சேகரிப்பு முகாம்.

கோவையில் மின்னணுக் கழிவுகள் சேகரிப்பு முகாம்மின்னணுக் கழிவுகளால் சுற்றுச்சூழல், மனித ஆரோக்கியம் பாதிப்பு – விழிப்புணர்வு அவசியம்: வீ த லீடர்ஸ் அமைப்பு வலியுறுத்தல்கோயம்புத்தூர் ரேஸ் கோர்ஸ் சாலையில், “We The Leader”, “Green Era Recycle” மற்றும் “Do Aram” அமைப்புகள் இணைந்து மின்னணுக் கழிவுகள் சேகரிப்பு முகாமை நடத்தின.We The Leaders அமைப்பின் டாக்டர் அனுஷா ரவி தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில், பொதுமக்களிடம் இருந்து வீடுகளில் பயன்படுத்தப்பட்டு கழிவாகும் மொபைல் போன்கள், சார்ஜர்கள், பேட்டரிகள், கணினி உதிரிபாகங்கள், லேப்டாப்கள் உள்ளிட்ட பல்வேறு மின்னணுப் பொருட்கள் சேகரிக்கப்பட்டன.மின்னணுப் பொருட்கள் பயன்பாட்டுக்குப் பிறகு முறையாக சேகரிக்கப்படாமல் திறந்தவெளியில் வீசப்படுவதால், அவற்றில் உள்ள ரசாயனங்கள் மற்றும் நச்சுப் பொருட்கள் மண் மற்றும் நிலத்தடி நீரில் கலந்து, உணவுச் சங்கிலி மூலம் மனிதர்களை பாதிக்கும் அபாயம் உள்ளதாக அமைப்பினர் தெரிவித்தனர்.இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன், மனிதர்களின் உடல்நலத்திற்கும் பாதிப்பு ஏற்படும் என்பதால், மின்னணுக் கழிவுகளை முறையாக சேகரித்து மறுசுழற்சி செய்வது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.மேலும், எதிர்காலத்தில் மின்னணுக் கழிவுகளின் அளவு கணிசமாக அதிகரிக்கும் நிலையில், உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக மின்னணுக் கழிவுகளை தனியாக சேகரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அனுஷா ரவி கேட்டுக்கொண்டார்.மின்னணுக் கழிவுகளை முறையாக சேகரித்து மறுசுழற்சிக்காக அனுப்புவதன் மூலம் சுற்றுச்சூழல் பாதிப்புகளை குறைக்க முடியும் என்றும், மின்னணுக் கழிவுகள் இல்லாத தூய்மையான தமிழகத்தை உருவாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.மேலும், அக்டோபர் 14-ஆம் தேதி நடைபெறும் சர்வதேச மின்னணுக் கழிவு நாளை முன்னிட்டு, கோயம்புத்தூரில் உள்ள தனியார் நிறுவனங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் இருந்து அக்டோபர் 4 முதல் 14-ஆம் தேதி வரை மின்னணுக் கழிவுகள் சேகரிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.பொதுமக்கள் தங்களது பகுதிகளில் உள்ள நிறுவனங்களில் மின்னணுக் கழிவுகளை மறுசுழற்சிக்காக வழங்க விரும்பினால், 9344162676 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *