JJTVNEWSTAMIL

தமிழால் இணைவோம் வாழ்க தமிழ்

தாம்பரம் அருகே பரபரப்பு,ரயில்வே தண்டவாளத்தில் பிரேக் டவுன் ஆன டாரஸ் லாரி, 15 நிமிடம் ரயில் போக்குவரத்து பாதிப்பு

தாம்பரம் அருகே பரபரப்பு,ரயில்வே தண்டவாளத்தில் பிரேக் டவுன் ஆன டாரஸ் லாரி, 15 நிமிடம் ரயில் போக்குவரத்து பாதிப்புசென்னை பல்லாவரம் அடுத்த திரிசூலம் ரயில்வே கேட்டில் இன்று பரபரப்பு சம்பவம் அரங்கேறியது.திரிசூலம் ரயில்வே கேட்டை டாரஸ் லாரி ஒன்று கடந்து சென்று கொண்டிருந்தபோது, திடீரென பிரேக் டவுன் ஆகி தண்டவாளத்திலேயே நின்றது.இதனால் ரயில்வே கேட்டை மூட முடியாத நிலை ஏற்பட்டது.சுமார் 15 நிமிடம் ரயில்வே கேட் திறந்தே இருந்ததால், சிக்னல் கிடைக்காமல் ஒரு விரைவு ரயில் மற்றும் இரண்டு மின்சார ரயில்கள் வழியில் நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஊழியர்கள், ஜே.சி.பி இயந்திரத்தின் உதவியுடன் தண்டவாளத்தில் நின்ற டாரஸ் லாரியை அப்புறப்படுத்தினர்.இதனையடுத்து ரயில்வே கேட் மூடப்பட்டு, 15 நிமிடம் தாமதத்திற்கு பிறகு ரயில் போக்குவரத்து சீரானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *