
மயிலாடுதுறை 07.10.26மயிலாடுதுறையில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு சேவா ஜோதி யாத்திரை என்ற தலைப்பில் நடைபெற்ற பேரணியில் தேசியக்கொடி தீபஜோதி கையில் ஏந்தி ஏராளமானோர் பங்கேற்பு:-பாரதப் பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராகவும், இந்தியாவின் பிரதமராகவும் பொது வாழ்க்கையில் 25 ஆண்டுகள் நிறைவு செய்ததை போற்றும் வகையில் பிரதமர் நரேந்திர மோடியின் 76 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சி சார்பில் சேவா ஜோதி யாத்திரை என்கிற பேரணி நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் பாஜக சார்பில் சேவா ஜோதி யாத்திரை பேரணி நடைபெற்றது.
மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு, பெரிய எல் இ டி திரையில் பிரதமர் நரேந்திர மோடியின் உரை ஒளிபரப்பு செய்யப்பட்டது. தொடர்ந்து வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற பெயரில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து தீபத்தை ஏற்றி பேரணியும் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்ட தலைவர் நாஞ்சில் பாலு தலைமையில் நடைபெற்ற பேரணியில் ஏராளமான பாரதிய ஜனதா கட்சியினர் பங்கேற்று கையில் தேசிய கொடியை ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர்.

Leave a Reply