
தேனி மாவட்டம் கம்பம் தெற்கு வட்டம் ஸ்ரீ மந்தை அம்மன் கோவில் திருவிழாவினை முன்னிட்டு மாபெரும் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் மிக விமர்சையாக நடைபெற்றது.தேனி மாவட்டம் கம்பம் நகரில் உள்ள தெற்கு வட்டம் ஸ்ரீ மந்தை அம்மன் கோவிலில் நடைபெறும் புரட்டாசி மாத திருவிழாவை முன்னிட்டு மாபெரும் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயத்தினை நடத்தினார்கள்.கம்பம் நகரில் இருந்து கம்பம் மெட்டு மாநில நெடுஞ்சாலையில் எட்டு கிலோமீட்டர் தூரம் வரை நடைபெற்ற இந்த மாட்டு வண்டி எல்கை பந்தயத்தில்தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், திருச்சி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த ஜோடி மாட்டு வண்டிகள் பங்கேற்றனர்இந்த போட்டியில் மாட்டு வண்டிகள் பந்தய எல்லையை நோக்கி சீறிப்பாய்ந்து சென்ற போது பங்கேற்ற மாடுகளையும் மாட்டு வண்டியை ஓட்டுபவர்களையும் உற்சாகப்படுத்தும் வகையில் சாலையோரம் நின்றிருந்த பார்வையாளர்கள் ஏராளமானோர் ஆரவாரம் செய்து உற்சாகபடுத்தினார்கள்.இந்த மாட்டு வண்டி பந்தயத்தில்தட்டான் சிட்டு, தேன்சிட்டு, பூஞ்சிட்டு , நடுமாடு,பெரிய மாடு என ஆறு பிரிவுகளில் 200 க்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள் கலந்து கொண்டது.இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாடுகளுக்கும் வண்டியை ஓட்டிய சாரதிகளுக்கும் ரொக்க பரிசு மற்றும் கேடயங்களை பரிசாகவழங்கினார்கள்இந்த மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டுகளித்தனர்.கம்பம் காவல் நிலைய காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Leave a Reply