
மாநில அளவிலான ரோல்பால் போட்டியில் திண்டுக்கல் மாவட்ட அணி சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்றது.மாநில அளவிலான 9 வயதிற்கு உட்பட்ட பிரிவினருக்கான ரோல்பால் சாம்பியன்ஷிப் போட்டிகள் இம்மாதம் 10ஆம் தேதி 11-ம் தேதி தஞ்சாவூரில் நடைபெற்றது. அதில் திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி பிரிவு ராஜன்உள் விளையாட்டு அரங்கைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு மாணவிகள் பிரிவில் முதலிடமும், மாணவர்கள் பிரிவில் இரண்டாம் இடமும் பெற்று திண்டுக்கல் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழாவானது சின்னாளப்பட்டி ராஜன் உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பயிற்சியாளரும் சர்வதேச நடுவருமான மாஸ்டர் எம்.பிரேம்நாத் மற்றும் பயிற்சியாளர்கள் சக்திவேல்,தங்கலட்சுமிமற்றும் பெற்றோர்கள் ஆகியோர் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Leave a Reply