JJTVNEWSTAMIL

தமிழால் இணைவோம் வாழ்க தமிழ்

மாவட்ட அளவிலான செஸ் போட்டி: 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் ஆங்கர் ஸ்போர்ட்ஸ் வேர்ல்டு சார்பாக மாவட்ட அளவிலான செஸ் போட்டி: 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் ஆங்கர் ஸ்போர்ட்ஸ் வேர்ல்டு மற்றும் கோவை மாவட்ட சதுரங்க சங்கம் இணைந்து முதன்முறையாக மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடைபெற்றது.

கோவை மாவட்ட சதுரங்க கழக செயலாளர் தனசேகர் அறிவுறுத்தலின் பேரில் போட்டிகள் நடைபெற்றன..

முன்னதாக போட்டிகளுக்கான துவக்க விழா ஆங்கர் ஸ்போர்ட்ஸ் வேர்ல்டு இயக்குனர்கள் நித்யானந்தன் மற்றும் திவ்யா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது..

இதில் சிறப்பு விருந்தினராக சர்வதேச நடுவர் விஜய ராகவன் கலந்து போட்டிகளை துவக்கி வைத்தார்..

இதில் ஆங்கர் செஸ் அகாடமி பயிற்சியாளர் ரஞ்சித்,மற்றும் நடுவர்கள் வினோத் குமார்,சந்தீப்,தீபன்,உள்ளிட்டோர் உடனிருந்தனர்..

ஆங்கர் ஸ்போர்ட்ஸ் வேர்ல்ட் வளாகத்தில் நடைபெற்ற இதில், பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை 500-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

7 வயதுக்குட்பட்டோர், 10 வயதுக்குட்பட்டோர், 13 வயதுக்குட்பட்டோர், 16 வயதுக்குட்பட்டோர் மற்றும் பொதுப்பிரிவு என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.
போட்டியாளர்களின் வயதிற்கு ஏற்ப பல்வேறு சுற்றுகள் நடத்தப்பட்டன.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகள், பதக்கங்கள் மற்றும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. 7 வயதுக்குட்பட்டோர் பிரிவில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

மாணவர்கள் மட்டுமின்றி பெரியவர்களும் ஆர்வத்துடன் பங்கேற்றதன் மூலம், கோவையில் சதுரங்க விளையாட்டின் மீதான ஆர்வம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *