JJTVNEWSTAMIL

தமிழால் இணைவோம் வாழ்க தமிழ்

சாலையில் கிடந்த 3 பவுன் தங்க நகை, ரூ.38,800 பணத்தை ஒப்படைத்த பெண்!வடசேரி காவல் ஆய்வாளர் பொன்னாடை அணிவித்து பாராட்டு

சாலையில் கிடந்த 3 பவுன் தங்க நகை, ரூ.38,800 பணத்தை ஒப்படைத்த பெண்!
வடசேரி காவல் ஆய்வாளர் பொன்னாடை அணிவித்து பாராட்டுநாகர்கோவில்: நவ – 27,கன்னியாகுமரி மாவட்டம்நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி சாலையில் இருந்து ஸ்காட் கிறிஸ்தவப் பள்ளி அருகே சென்று கொண்டிருந்த பெண் ஒருவர், சாலையில் ஆப்பிள் பழங்களுடன் கிடந்த பையை கண்டெடுத்தார்.அந்தப் பையில் சுமார் 3 பவுன் மதிப்புள்ள இரண்டு தங்கச் செயின்களும், ரூ.38 ஆயிரத்து 800 ரொக்கப் பணமும் இருந்தன. இதனைத் தொடர்ந்து, அந்தப் பெண் நேர்மையுடன் நகைகள் மற்றும் பணத்தை வடசேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.பெண்ணின் நேர்மையான செயலையும், சமூகப் பொறுப்புணர்வையும் பாராட்டும் வகையில் வடசேரி காவல் நிலைய ஆய்வாளர் அவருக்குப் பொன்னாடை அணிவித்து பாராட்டுத் தெரிவித்தார்.மேலும், இச்செயலுக்கு உறுதுணையாக இருந்த வழக்கறிஞர்கள் கோபாலகிருஷ்ணன் மற்றும் பிரதீஷ் ஆகியோருக்கும் காவல்துறை சார்பில் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன.சாலையில் கிடைத்த தங்க நகைகள் மற்றும் பணத்தைத் தவறவிட்ட உரிய நபர்கள் உரிய அடையாள ஆவணங்களுடன் வடசேரி காவல் நிலையத்தை அணுகி பெற்றுக்கொள்ளலாம் என காவல் ஆய்வாளர் கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *