
மேலசங்கரன்குழியில் ஊராட்சி அளவிலான கைப்பந்து போட்டி!
விளைவீடு அணி முதலிடம் பெற்று சாதனைநாகர்கோவில் – நவ – 27,கன்னியாகுமரி மாவட்டம், மேலசங்கரன்குழி ஊராட்சி அளவிலான கைப்பந்து போட்டி விளைவீடு விளையாட்டு மைதானத்தில் 22.11.2026 அன்று சிறப்பாக நடைபெற்றது.WE THE LEADERS இயக்கத்தின் தலைமை மக்கள் சேவகரும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான கே. அண்ணாமலையின் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இப்போட்டிக்கு, மேலசங்கரன்குழி ஊராட்சி இயக்கத்தின் சேவகர் பேயோடு ஆர். சிவகுமார் தலைமை வகித்தார்.போட்டியை கன்னியாகுமரி மாவட்ட இயக்கத்தின் மக்கள் சேவகரும், முன்னாள் மாவட்ட மீன்வளத்துறை தலைவருமான ஈ.எஸ். சகாயம், முன்னாள் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜகோபால், பெரும்செல்வவிளை ஊர் தலைவர் கிருஷ்ணதாஸ், இந்திய ராணுவ விளையாட்டுப் பயிற்சியாளர் ராமச்சந்திரன், ஜெகநாதகிருஷ்ணன், சிவபிரசாத் உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர்.
மாலை 5 மணியளவில் போட்டிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் நாகர்கோவில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் வீரசூர பெருமாள், விளைவீடு ஊர் தலைவர் ராதாகிருஷ்ணன், பெரும்செல்வவிளை பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் தாணுபிள்ளை, சீலா ராஜன், சுதன், சிவபிரசாத், இளங்கோ, ரமேஷ், வினோத், மதன், முருகேசவாசன், ரதீஷ், சுபின் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகளையும் பரிசுத் தொகைகளையும் வழங்கினர்.
போட்டியில் விளைவீடு அணி முதலிடத்தையும், பெரும்செல்வவிளை அணி இரண்டாம் இடத்தையும், பரப்புவிளை அணி மூன்றாம் இடத்தையும், மேலசங்கரன்குழி அணி நான்காம் இடத்தையும் பெற்றன.வெற்றி பெற்ற அணியினருக்கும், போட்டியில் பங்கேற்ற வீரர்களுக்கும் பொதுமக்கள் மற்றும் WE THE LEADERS இயக்கப் பொறுப்பாளர்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
போட்டிக்கான ஏற்பாடுகளையும் ஒருங்கிணைப்புப் பணிகளையும் மாதேஷ் செய்திருந்தார்.

Leave a Reply