JJTVNEWSTAMIL

தமிழால் இணைவோம் வாழ்க தமிழ்

கோவை மை கராத்தே இண்டர்நேஷனல்

கோவை மை கராத்தே இண்டர்நேஷனல் சார்பாக 67 வது கராத்தே பட்டைய தேர்வு போட்டி

மாணவர்களுக்கு இணையாக மாணவிகளும் கருப்பு, உள்ளிட்ட வண்ண பட்டையங்கள் பெற்று கவனம் ஈர்ப்பு

கோவை மை கராத்தே இண்டர்நேஷனல் பள்ளி சார்பாக நடைபெற்ற கராத்தே பட்டைய தேர்வில் கோவை உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்..

கோவையில் மை கராத்தே இண்டர்நேஷனல் சார்பாக 67 வது கராத்தே பட்டைய தேர்வு போட்டி மற்றும் சிலம்பம் போட்டிகளுக்கான தேர்வு சரவணம்பட்டி பகுதியில் உள்ள மான்செஸ்டர் சர்வதேச பள்ளி வளாகத்தி்ல் நடைபெற்றது.

இதில் பிரவுன், பச்சை, மஞ்சள்,நீலம்,, ஆரஞ்சு,கருப்பு உள்ளிட்டவற்றில் பட்டையம் வழங்குவதற்கான தேர்வில் 3 வயது முதல் 30 வயது வரை உள்ள 500 க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

மை கராத்தே இண்டர்நேஷனல் பள்ளியின் தலைவர் தியாகு நாகராஜ் கலந்து கொண்டு பட்டையம் பெறுவதற்கான கராத்தே போட்டியை நடத்தி வீரர்களை தேர்வு செய்தார்.

இதில், கட்டா, கராத்தே உள்ளிட்ட பிரிவுகளில் கருப்பு பட்டை பெற்ற தலைமை பயிற்சியாளர்கள் முன்னிலையில் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு சான்றிதழ்களும் பட்டையங்களும் வழங்கப்பட்டது.

இதில் பல்வேறு நிலைகளில் பயிற்சி நிறைவு செய்த 25 வீர்ர்,வீராங்கனைகளுக்கு கராத்தே பயிற்சியின் உயர்மிகு கருப்பு வண்ண பட்டயங்கள் வழங்கப்பட்டன..

இதே போல சிலம்பம் தேர்வு நடைபெற்று மாவட்ட,மாநில அளவிலான போட்டிகளுக்கு மாணவர்கள் தேர்வு நடைபெற்றது்..
இதே போல தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தகுதி அடிப்படையில் மஞ்சள் ,ஆரஞ்சு,பச்சை,நீலம்,ஊதா என உள்ளிட்ட வண்ண பட்டையங்கள் வழங்கப்பட்டன..

கராத்தே கலையை தற்போது பள்ளி கல்லூரி மாணவிகள் ஆர்வமுடன் கற்று வருவதாகவும், குறிப்பாக தற்போது பெண் குழந்தைகள் பெற்றோர் இது போன்ற தற்காப்பு கலைகளை கற்று கொடுக்க அதிகம் முன்வருவதாக தலைமை பயிற்சியாளர் தியாகு நாகராஜ் தெரிவித்தார்..

போட்டிகளுக்கான ஏற்பாடுகளை மை கராத்தே இண்டர்நேஷனல் மையத்தின் தலைமை பயிற்சியாளர்கள் சிவ முருகன், சரவணன்,விமல், விது சங்கர் ,உள்ளிட்டோர் செய்திருந்தனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *