
கார்மல் பள்ளியில் அரசியல் சாசன சட்ட நாள் விழிப்புணர்வு பேரணிநாகர்கோவில் : நவம்பர் 27:இந்திய அரசியல் சாசன சட்டம் நிறைவேற்றப்பட்ட நவம்பர் 26 ஆம் நாளின் முக்கியத்துவத்தை
எடுத்துரைக்கும் வகையில் கார்மல் பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.பள்ளி தலைமை ஆசிரியர் அருட்தந்தை மரிய பாஸ்டின் துரை தலைமை தாங்கினார்.ஆசிரியர் மரிய தமிழரசன் அனைவரையும் வரவேற்றார்.பள்ளியின் தாளாளர் அருத்தத்தைவின்சென்ட் அமல்ராஜ் சே.ச., லசாக் இயக்க ஒருங்கிணைப்பாளர் வெர்ஜின்,குழந்தைகளுக்கான அரசியல் சாசன சட்ட விழிப்புணர்வுக் கல்வி ஒருங்கிணைப்பாளர் அருள் வாசகர்,தேர்தல் விழிப்புணர்வு கல்வி இயக்க ஒருங்கிணைப்பாளர் சவரி முத்து,தேசிய மாணவர் படை இயக்குநர் இன்னாசி ராஜாஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியாளர் செந்தில் வேல்முருகன் அவர்கள் கலந்து கொண்டு அரசியல் சாசன சட்டம் குறித்து எடுத்துரைத்து பேரணியைத் தொடக்கி வைத்தார்.
அரசியல் சாசன சட்ட உறுதி மொழியை ஆசிரியர் சுந்தர் சிங் கூற அனைத்து மாணவர்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.ஆசிரியர் ஜெரோம் கோபிநாத்நன்றி கூறினார்.
கார்மல் பள்ளி வளாகத்தில் இருந்துபுறப்பட்டு ராமன்புதூர் கலுங்கு சந்திப்பு,செட்டிகுளம், சற்குண வீதி,வழியாக மீண்டும் கார்மல் பள்ளி வந்தடைந்தது.அரசியல் சாசன சட்டத்தின் விழிப்புணர்வு பதாகை ஏந்தி ஒருமைப்பாடு இறையாண்மை சமத்துவம் சகோதரத்துவம் குறித்த முழக்கமிட்டு மாணவர்கள் பேரணியில் பங்கேற்றனர்.

Leave a Reply