JJTVNEWSTAMIL

தமிழால் இணைவோம் வாழ்க தமிழ்

மானாமதுரை நகராட்சி நிர்வாகம் சார்பில் வீடு தேடிவரும் இயற்கை உரம்

மானாமதுரை நகராட்சி நிர்வாகம் சார்பில் வீடு தேடிவரும் இயற்கை உரம்மானாமதுரை
நவ 14 சிவகங்கை மாவட்டம்மானாமதுரை நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் மூலமாக வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களிலிருந்து சேகரம் செய்யப்படும் ஈரக் கழிவுகளில் இருந்து இயற்கையான முறையில் செழிப்பு உரம் தயார் செய்து வீட்டு தோட்டம் பராமரிக்கும் வீடுகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது.மேலும் பொதுமக்கள் தங்கள் தோட்டத்திற்கு தேவையான இயற்கை செழிப்பு உரம் கிலோ ரூ. 10 என்ற விலையில் நகராட்சியிடமிருந்து பெற்றுக் கொள்கின்றனர். மற்றும் இயற்கை வேளாண்மை செய்யும் விவசாயிகள் தங்களுடைய ஆதார் கார்டு அல்லது பட்டா நகல் வழங்கி இந்நகராட்சியின் நுண்ணுயிர் செயலாக்க மையங்களிலிருந்து செழிப்பு உரம் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நகராட்சியின் இயற்கை உரங்களை பெற்று வீட்டுத்தோட்டம் வயல்வெளி உள்ளிட்ட விவசாய பணிகளுக்கு பயன்படுத்தி பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.எனநகராட்சிஆணையாளர்
முத்துச்செல்வம் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *