JJTVNEWSTAMIL

தமிழால் இணைவோம் வாழ்க தமிழ்

10 ஆண்டுகளாகத் தனி மனிதராக 1.50 லட்சம் பனை விதைகள் நட்டு வளர்ப்பு! – சமூக ஆர்வலர் ஜோஸ்வாவின் பசுமைப் பணி

10 ஆண்டுகளாகத் தனி மனிதராக 1.50 லட்சம் பனை விதைகள் நட்டு வளர்ப்பு! – சமூக ஆர்வலர் ஜோஸ்வாவின் பசுமைப் பணிபனை மரங்களின் குருத்துகளை வெட்டி விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை – சாலையோரம் குப்பை கொட்டுவதையும் தடுக்க வலியுறுத்தல்!நாகர்கோவில்: நவ – 23,கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை தாலுகா, பூதப்பாண்டி பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜோஸ்வா, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சுற்றுச்சூழல் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்டு சுமார் 1.50 லட்சம் பனை விதைகளை நட்டு வளர்த்து வருகிறார்.
பூதப்பாண்டி, திட்டுவிளை, தாழக்குடி, செண்பகராமன்புதூர், சந்தைவிளை, தோப்பூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பேரூராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளுக்குட்பட்ட அரசு நீர்வாய்க்கால் கரையோரங்களில் பனை விதைகளை நட்டு பராமரித்து வருகிறார். இதற்காக அரசிடமிருந்தோ, தனிநபர்களிடமிருந்தோ எந்தவித நிதியுதவியும் பெறாமல் தனது சொந்தப் பணத்தையே செலவிட்டு வருகிறார். மேலும், பனை மரங்களைப் பாதுகாத்து பராமரிப்பதற்காகப் பணியாளர்களையும் நியமித்துள்ளார்.குறிப்பாக, பூதப்பாண்டி பொதுப்பணித்துறை அலுவலகத்திலிருந்து ஈசாந்திமங்கலம் செல்லும் சாலையோர நீர்வாய்க்கால்களில் நூற்றுக்கணக்கான பனை மரங்கள் செழித்து வளர்ந்து கம்பீரமாகக் காட்சியளிக்கின்றன.
இந்நிலையில், இந்தச் சாலையில் பயணிக்கும் சில வாகன ஓட்டிகள் தங்களது வீடுகளில் சேகரமாகும் கழிவுப் பொருட்களை சாலையோரங்களில் வீசிச் செல்கின்றனர். இதனால் பசுமையான சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன், அப்பகுதியின் தூய்மையும் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, சாலையோரங்களில் குப்பைகள் கொட்டுவதைத் தடுக்க பேரூராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர் ஜோஸ்வா கோரிக்கை விடுத்துள்ளார்.மேலும், தற்போது கார்த்திகை மாதம் என்பதால் வீடுகளில் கொழுக்கட்டை தயாரிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் பனை ஓலைகளைப் பெறும் நோக்கில் சிலர் பனை மரங்களின் குருத்து மடல்களை ஈவிரக்கமின்றி வெட்டி அழிப்பதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார். குறிப்பாக, பணத்திற்காக பனை மரங்களின் குருத்துகளை வெட்டி சந்தைகளில் விற்பனை செய்யும் செயல்களும் நடைபெற்று வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.பல ஆண்டுகளாகப் பாடுபட்டு வளர்த்த பனை மரங்கள் இதுபோன்று வெட்டி அழிக்கப்படுவது மிகுந்த வேதனையை ஏற்படுத்துவதாகக் கூறும் அவர், இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது காவல்துறை மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.தன்னைப் போன்ற சமூக ஆர்வலர்களுக்கு மாவட்ட நிர்வாகம் நிதியுதவி வழங்க முன்வராவிட்டாலும் பரவாயில்லை; தங்களது சொந்த முயற்சியில் வளர்க்கப்படும் மரங்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுத்தால், மேலும் பல நல்ல சுற்றுச்சூழல் பணிகளை மேற்கொள்ளத் தங்களைப் போன்றவர்களுக்கு புத்துணர்ச்சியும் ஊக்கமும் கிடைக்கும் என்று சமூக ஆர்வலர் ஜோஸ்வா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *