திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு நடைபெற்றது.திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி உலக புகழ்பெற்ற அஸ்வினி நட்சத்திரத்தின் பரிகார ஸ்தலமாக விளங்கும் பிறவி மருந்தீஸ்வரர் ஆலயத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத் திருவிழா அன்று சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு நடைபெற்றது.சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு ஆண்டுதோறும் முன்னோர்களால் கடைப்பிடிக்கப்பட்ட ஒன்றாகும் சிவன் ஆலயங்கள் விஷ்ணு ஆலயங்கள் முருகப்பெருமான் உள்ளிட்ட ஆலயங்களில் சொக்கப்பனை கொளுத்துவது அதிகமாக கருதப்படுகிறது அதனைத் தொடர்ந்து இன்று பிறவி மருந்தீஸ்வரர் ஆலயத்தில் மூலவருக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பல்லாக்கில் அமர வைத்து சுவாமி ஆலயம் வளம் வந்து ஆலயம் எதிரே உள்ள சப்பரையில் அமர வைத்து..காய்ந்த பனை மட்டையில் சொக்கப்பனை கொளுத்தும் வழிபாடு பின்பற்றப்பட்டது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு அண்ணாமலையாருக்கு அரோகரா கோஷங்கள் எழுப்பி சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு நடைபெற்றது.இந்த நிகழ்வில் கோவில் நிர்வாகிகள் கோவில் செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்..


Leave a Reply