

மயிலாடுதுறைசமயக்குரவர்களால் பாடல் பெற்றதும் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததுமான மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு, 1008 சங்குகளால் அபிஷேகம் நடைபெற்றது, திரளான பக்தர்கள் வழிபாடு நடத்தினர்:-கார்த்திகை மாதத்தில், திங்கட்கிழமைகளில், சங்குகளில் புனித நீர் நிரப்பி, சிவனுக்கு அபிஷேகம் செய்வது சிறப்பான விழாவாகும். அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு, சமயக்குரவர்கள் மூன்று பேரால் பாடல்பெற்ற . 1,500ஆண்டுகள் பழைமை வாய்ந்த மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தில் , இன்று 1008 சங்குகளால் அபிஷேகம் நடைபெற்றது.முன்னதாக ஆலய நூற்றுக்கால் மண்டபத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு சிறப்பு ஹோமம் நடைபெற்றது அதில் வைத்து பூஜிக்கப்பட்ட ஊற்றப்பட்ட 1008சங்குகளுக்கு மகா தீபாராதனை செய்து ஹோமம் நிறைவடைந்தது.அதனைத் தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க புனித நீர் அடங்கிய கடங்கள் ஊர்வலமாக ஆலய உள்பிரகாரத்தில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது, பின்னர் 1008 சங்குகளில் இருந்த புனித நீர் கொண்டு சிவாச்சாரியார்கள் லிங்கத்திற்கு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து மஹாதீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் இதில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply