

பிரசித்தி பெற்ற கோவில்களில் தீப கார்த்திகை ஒட்டி கோவில் முன்பு சொக்கப்பனை கொளுத்தி சிறப்பு வழிபாடு.மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பகுதிகளில் பல்வேறு இடங்களில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் தீப கார்த்திகை ஒட்டி அனைத்து கோயில்கள் முன்பும் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு சிறப்பு பூஜை உடன் நடைபெற்றது குறிப்பாக திருவிடைக்கழி கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற அறுபடை வீடுகளுக்கு இணையான சிவனும் முருகனும் ஒரே கருவறையில் அமைந்துள்ள பல்வேறு வரலாறுகள் சிறப்புகள் கொண்ட முருகன் கோவிலில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு ஐதீக முறைப்படி நடைபெற்றது பனைமரம் பனை ஓலைகளால் அமைக்கப்பட்ட சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு நடைபெற்றது சிறப்பு அலங்காரத்தில் சந்திரசேகரர் அம்பாள் எழுந்தருளி காட்சியளிக்க சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு நடைபெற்றது தீப கார்த்திகையில் சொக்கப்பனை கொளுத்தி அதில் வரும் சுடர் ஒளியை அக்னி மயலிங்கமாகவும் இறைவனின் அருள் ஒளியாகவும் வணங்குகின்றனர் மேலும் அதன் கறித்துகள் எடுத்து திருநீராக பூசிக் கொள்ளவும் செய்கின்றனர் ஐதீக முறைப்படி செழிப்பாக இருக்க வேண்டிய சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு நடைபெற்று வருகிறது கோவில் நிர்வாகம் கோயில் செயல் அலுவலர் பிரேம்குமார், பரம்பரை அடங்காவலர் ஜெயராமன், கோவில் குருக்கள் சார்பில் சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது ஏராளமான பக்தர்கள் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வில் பங்கேற்றனர் பக்தர்கள் பங்கேற்று வழிபாடு முருகன் மற்றும் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.

Leave a Reply