JJTVNEWSTAMIL

தமிழால் இணைவோம் வாழ்க தமிழ்

திருவண்ணாமலை யில் பூத நாராயண பெருமாளை தரிசிக்க முடியாமல் பக்தர்கள் அவதி

திருவண்ணாமலை யில் பூத நாராயண பெருமாளை தரிசிக்க முடியாமல் பக்தர்கள் அவதிதிருவண்ணாமலை நவ25 இந்தியாவில் பூலோக கைலாயம் என அழைக்கப்படும் திருவண்ணாமலைஅண்ணாமலையாரை தரிசனம் செய்ய தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இது தவிர தற்போது தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் சிவனடியார்கள் இரவு பகலாக கிரிவலம் சென்று வருகின்றனர்.திருவண்ணாமலைக்குவரும் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து உள்ளது. பக்தர்கள் கிரிவலம் சென்று வரும் போது திருவண்ணாமலை
வடக்கு பெரிய வீதியில் உள்ள ஶ்ரீபூத நாராயண பெருமாள் கோவிலில் தரிசனம் செய்து செல்வார்கள். பூத நாராயண பெருமாள் திருவண்ணாமலையின் காவல் தெய்வமாக பக்தர்கள் கருதி அண்ணாமலையார் கோவில் வரும் பூத நாராயண பெருமாளை தரிசனம் செய்வதை கிரிவலம் செல்லும் பக்தர்கள் வழக்கமாக வழிபாடு செய்து செல்கின்றனர். ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக கார்த்திகை தீபம் திருவிழா நடைபெறும் போதுமுக்கிய பிரமுகர்கள் கார்கள் நேரடியாகஅண்ணாமலையார் கோவில் செல்வதற்க்காக பூத நாராயண பெருமாள் கோவில் முன்பு இரும்பு பேரி கார்டுகள் ஏற்படுத்தி கிரிவலம் வரும் பக்தர்கள் தீப திருவிழா காண வருகை தரும் பக்தர்கள் பூத நாராயண பெருமாளை கோவிலுக்கு உள்ளே சென்று தரிசனம் செய்ய முடியாத நிலை உள்ளது. தொடர்ந்து பக்தர்கள் ரோட்டில் நின்று சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் காவல் தெய்வமாக இருக்கும் பூத நாராயண பெருமாளை உள்ளே சென்று தரிசனம் செய்ய முடியவில்லை எனவேதனையுடன் செல்கின்றனர்.அண்ணாமலையார் கோவிலுக்கு செல்லும் விஐபி மற்றும் முக்கிய பிரமுகர்களை அழைத்து செல்ல வேறு வழியில் சென்று பக்தர்கள் பூத நாராயண பெருமாளை தரிசிக்க வழி ஏற்படுத்திட வேண்டும். என பக்தர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இனி வரும் காலங்களில் இந்து சமய அறநிலையத் துறை பூத நாராயண பெருமாளை தரிசிக்க வழி ஏற்படுத்தி
கோவில் முன்பு இரும்பு பேரி கார்டுகள் அமைக்க கூடாது எனவும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *