
மானாமதுரை அருகே கட்டிக் குளம் சூட்டுக் கோல் மாயாண்டி சுவாமிகள் தவ சாலையில் சொக்கப்பனை கொளுத்தி வழிபாடுமானாமதுரை, நவ 26 சிவகங்கை மாவட்டம்
மானாமதுரை அருகே உள்ள கட்டிக்குளம் கருப்பனேந்தேல் மடத்தில் உள்ள மகா சித்தர் சூட்டுக் கோல் மாயாண்டி சுவாமிகள் தவ சாலையில் கார்த்திகை தீபம் விழாவை முன்னிட்டு பதினாறு வகையான அபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மகா சித்தர் சூட்டுக் கோல் மாயாண்டி சுவாமிகள் தவசாலை முழுவதும் மண் விளக்கு தீபம் ஏற்றி
சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து தண்டாயுதபாணி சுவாமி வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
மானாமதுரைசுந்தர விநாயகர் கோவில் முன்பு -சொக்கப்பனை பந்தல் அமைத்து சிறப்பு பூஜை களை கோவில் ஸ்தாபகர் ராஜேந்திர பிரசாத் செய் தார். அதைத் தீபாராதனை காண்பித்து சொக்கப் பனை கொளுத்தி ஏராள மான பக்தர்கள் வழிபாடு செய்தனர். வைகை ஆற்று கரையில் உள்ள ஆனந்த வல்லி சோமநாதர் கோவிலில்வள்ளி தெய்வானையு டன் சுப்பிரமணிய சுவாமி அலங்கரிக்கப்பட்டு கோவில் பிரகாரம் வலம் வந்து கோவில் முன்பு சிறப்பு பூஜைகள் நடை பெற்றது தொடர்ந்து சொக்கப் பனை ஏற்றப்பட்டது. குறிச்சி வழி விடு பெரிய நாச்சி அம்மன் கோவிலில் காசிவிஸ்வநாதர் மற் றும் செந்தில் ஆண்டவ ருக்கு சிறப்பு பூஜைகள் செய்து சொக்கப்பனை கொளுத்தி வழிபாடு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர் கள் கலந்து கொண்டனர். மானாமதுரை வீர அழகர் கோவில் சொக்கப்பனை கொளுத்தி வழிபாடு செய்தனர்.

Leave a Reply