
மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில் கார்த்திகை பௌர்ணமியை முன்னிட்டு சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி. சுவாமி அம்பாள் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் சர்வ அலங்காரத்தில் வீதி உலாவாக பக்தர்களுக்கு காட்சியளித்தனர் :-கார்த்திகை மாதம் வரும் பௌர்ணமி மற்றும் கார்த்திகை நட்சத்திரம் சேர்ந்த திருநாளில் சிவாலயம் உள்ளிட்ட ஆலயங்களில் சொக்கப்பனை நிகழ்ச்சி நடத்தப்படகிறது. அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான மயில் உருவில் அம்பாள் சிவனை வழிபட்ட ஆலயமான ஶ்ரீமாயூரநாதர் ஆலயத்தில் சொக்கப்பனை தீபம் ஏற்றப்பட்டது. பஞ்சமூர்த்திகளுடன் மாயூரநாதர் வெளிமண்டபத்தில் எழுந்தருள செய்யப்பட்டு மகாதீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து கீழவீதியில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளினர். பின்னர் சுவாமி சன்னதியில் மகா தீபம் ஏற்றப்பட்டு தீபத்தை சிவாச்சாரியார்கள் எடுத்து வந்து சொக்கபனை கொளுத்தப்பட்டது. தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் திருவீதியுலா சென்று உபகோயில்களில் சொக்கபனை ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Leave a Reply