
திண்டுக்கல் மெட்ரோ லயன்ஸ் சங்கம் மற்றும் திண்டுக்கல் திருமதி. செல்வி நினைவு அறக்கட்டளை இணைந்துT. மந்தநாயக்கன்பட்டிஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்குப் புத்தாடைகள் வழங்கி தீபாவளி கொண்டாட்டவிழா நிகழ்ச்சி.பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள்திண்டுக்கல் மெட்ரோ லயன்ஸ் சங்கம் மற்றும் திண்டுக்கல் திருமதி. செல்வி நினைவு அறக்கட்டளை இணைந்துதீபாவளி கொண்டாட்டம் மற்றும்பள்ளி மாணவர்களுக்குப் புத்தாடைகள் வழங்கும் விழா நிகழ்ச்சி T. மந்தநாயக்கன்பட்டிஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில்நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் மெட்ரோ லயன்ஸ் சங்கத்தின் தலைவர் Ln. Dr.செ. சகாய செல்வராஜ் தலைமை தாங்கி தலைமை உரையாற்றினார். மாவட்ட இணைப் பொருளாளர் Ln. K. ரவிச்சந்திரன், திண்டுக்கல் மெட்ரோ லயன்ஸ் சங்கத்தின் பட்டய உறுப்பினர்
Ln. D.S.பாலச்சந்தர் ,திண்டுக்கல் மெட்ரோ லயன்ஸ் சங்கத்தின் செயலாளர் Ln.M. சுந்தர் ஆகியோர்
முன்னிலை வகித்தார்கள். T. மந்தநாயக்கன்பட்டிஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியின் தலைமையாசிரியைA. கான்ஸ்டன்ஸ் உஷா மெடோனா வரவேற்புரையாற்றினார்.திருமதி. செல்வி நினைவு அறக்கட்டளையின் நிறுவனர்R. செல்லமுத்து கலந்து கொண்டு55 பள்ளி மாணவர்களுக்குப் புத்தாடைகள் மற்றும் ஸ்வீட் பாக்ஸ் வழங்கினார். இதன் மதிப்பு சுமார் ரூபாய் 80 ஆயிரம் ஆகும்.இந்நிகழ்ச்சிக்குசிறப்பு விருந்தினராகதிண்டுக்கல் வாசகர் வட்ட பொருளாளர் Rtn. T. அனந்த ராமன் கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில்
தீபாவளி திருநாளில் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது குறித்து நகைச்சுவை உணர்வுடன் சிறப்பாக சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில்Ln.D.செல்வேந்திரன்,Ln. R.நந்தகுமார் , லியோ சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன், பொறியாளர் Ln. G முரளி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரையாற்றினார்கள்.இந்நிகழ்ச்சியின் முடிவில்திண்டுக்கல் மெட்ரோ லயன்ஸ் சங்கத்தின் பொருளாளர் Ln. K. சுகுமாரன் நன்றியுரையாற்றினார்.

Leave a Reply