
இந்தியாவின் நெ.1 டீலர் வசந்த் & கோ நடத்தும் மாபெரும் வேலை வாய்ப்புத் திருவிழாநாகர்கோவில் – நவ – 27,இந்தியாவின் நெ.1 டீலர் வசந்த் & கோ பல்வேறு சமூக நல பணிகளை செய்து வருகிறது. அந்த வகையிலே குமரி மாவட்ட இளைய தலைமுறையினருக்காக ஒரு மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் வரும் 19.12.2026 (சனிக்கிழமை) அன்று நாகர்கோவிலில் உள்ள பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது .ஏழை எளிய பெற்றோர்கள் கஷ்டப்பட்டு வங்கியில் கடன் வாங்கி தங்கள் குழந்தைகளை படிக்க வைத்து பின் வேலைவாய்ப்பின்றி அவதிப்படும் சூழ்நிலையை முடிந்தவரை சரி செய்ய முயற்சிக்கும் வகையில் இந்த சேவையில் ஈடுபட்டுள்ளோம்.இதில் பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விரும்பும் இளைய தலைமுறையினர் அதற்கான முன்பதிவில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும். இந்த முன்பதிவு 30.11.2026 முதல் 06.12.2026 வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் ஆசாரிபள்ளம், நாகர்கோவில் கோர்ட் ரோடு, மார்த்தாண்டம், கருங்கல், பனச்சமூடு, களியக்காவிளை மற்றும் தக்கலையில் உள்ள வசந்த் & கோவில்களில் காலை 10:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை நடைபெறும். முகாமில் கலந்து கொள்ள, முன்பதிவு செய்ய வரும் இளைஞர்கள், பெண்கள் தங்களது பயோ-டேட்டா, பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், கல்வி சான்றிதழ்கள் அசல் மற்றும் நகல்கள், ஆதார் அட்டை அசல் மற்றும் நகல்களை எடுத்து வர வேண்டும். பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் முதல் முதுநிலை, இளநிலை, ஐ.டி.ஐ., டிப்ளமோ மற்றும் பொறியியல் படித்தவர்கள் இதில் கலந்து கொள்ளலாம்.சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு தகுதியுள்ளவர்களுக்கு அழைப்புக் கடிதம் வழங்கப்படும். வேலைவாய்ப்பு முகாமில் 19.12.2026 பங்கேற்கும் அனைவரும் கட்டாயம் தங்களது அழைப்பு கடிதத்தை கொண்டு வர வேண்டும்.முன்பதிவு குறிப்பிட்ட 7 நாட்களில் மட்டுமே நடத்தப்படும். எந்தக் காரணத்தை முன்னிட்டு வேலைவாய்ப்பு முகாம் (19.12.2026) அன்று எந்தப் பதிவும் நடத்தப்பட மாட்டாது. 19.12.2026 அன்று காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும். வசந்த் & கோ நிறுவனம் ஏற்கனவே பல்வேறு முகாம்களை, நாகர்கோவில் மற்றும் திருநெல்வேலியில் நடத்துபவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கியிருக்கிறது.மேலும் இளைஞர்களின் திறனை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வசந்த் கோ கிளைகளில் “பயோ-டேட்டா டிராப் பாக்ஸ்”-யை நிறுவி அதில் தங்களது தற்குறிப்பை (Resume) செலுத்தும் வேலை தேடும் இளைஞர்களுக்கு கட்டணமில்லாத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளித்து அதற்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன. இந்தப் பயிற்சி தொடர்ந்து எங்களிடம் விண்ணப்பிக்கும் இளைஞர் சமுதாயத்திற்கு வழங்கப்படும் என்பதை இதன் மூலம் தெரிவிக்கிறோம். வேலை தேடும் இளைய தலைமுறைகளுக்கு தங்கள் திறனை மேலும் வளர்த்துக் கொள்ள எங்களை அணுகி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.மேலும் சமூகப் பணிகளில் ஒருவரான எங்கள் தந்தை எச்.வசந்தகுமார் அவர்களின் வழியில் நாங்களும் எனது கன்னியாகுமரி தொகுதி மக்களின் நலனுக்காக பல்வேறு மக்கள் நலப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். அந்த வகையில் இந்த வேலைவாய்ப்பு முகாமும் இளைஞர்கள் நலனுக்காக நாங்கள் செய்யும் பொதுநலப் பணியே.குறிப்பு: இந்த வேலைவாய்ப்பு முகாமை பொறுத்தவரை எந்த வித பணப்பரிவர்த்தனையும் கிடையாது. இது முழுக்க முழுக்க வசந்த் & கோ நடத்தும் கட்டணமில்லா வேலைவாய்ப்பு முகாம் ஆகும் என்று கூறியுள்ளனர்.

Leave a Reply