JJTVNEWSTAMIL

தமிழால் இணைவோம் வாழ்க தமிழ்

சுகுணா கல்வி குழுமங்கள் சார்பாக இந்திய அரசிலமைப்பு தின விழா

சுகுணா கல்வி குழுமங்கள் சார்பாக இந்திய அரசிலமைப்பு தின விழாஅரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் குறித்து கிராம ஊராட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்ற விழப்புணர்வு கருத்தரங்கம்இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு, அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் மற்றும் கடமைகள் குறித்து பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிப் பிரதிநிதிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கருத்தரங்கம் கோவை காளப்பட்டி சுகுணா கல்வி நிறுவன வளாகத்தில் நடைபெற்றது.சுகுணா கல்வி நிறுவனங்கள் சார்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கில், பேரூராட்சிகள் துறையின் முன்னாள் கூடுதல் இயக்குநர் எஸ்.எம். மலையமான் திருமுடிகாரி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினார்.அப்போது, அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள், சமத்துவம், சுதந்திரம், மத உரிமைகள் உள்ளிட்டவற்றை கிராமப்புற மக்களும் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும். தங்களுக்கான உரிமைகளைத் தெரிந்து கொள்வதன் மூலம் அவற்றைப் பாதுகாப்பதுடன், ஜனநாயக நடைமுறைகளிலும் பொறுப்புடன் பங்கேற்க முடியும் என வலியுறுத்தினார்.நிகழ்ச்சியில் சுகுணா கல்வி நிறுவனங்களின் தலைவர் வி. லட்சுமிநாராயணசாமி, தலைவர் எல். சுகுணா, சுகுணா அறக்கட்டளைச் செயலாளர் டாக்டர் ஸ்ரீகாந்த் கண்ணன், இயக்குநர் டாக்டர் வி. சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சயை சுகுணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி டீன் டாக்டர் மோகனசுந்தரம்,முதல்வர் ராஜ்குமார்,சுகுணா தொழில் நுட்ப கல்லூரி முதல்வர் மகுடீஸ்வரன்,பாலிடெக்னிக் கல்லூரி டீன் ரம்யா சந்தோஷ்,முதல்வர் கோவிந்தராஜூலு,ஆகியோர் ஒருங்கிணைத்தனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *