
கரூர்:26.11.2026கரூரில் அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு சட்டக்கல்லூரி மாணவ , மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வுப் பேரணி – துணை நீதிபதி தொடங்கி வைத்தார்.கரூர் ஈரோடு சாலையில் அமைந்துள்ள சட்டக் கல்லூரியில் அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு, சட்டக் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1949-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்டதை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் நவம்பர் 26-ஆம் தேதி அரசியலமைப்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக நடைபெற்ற நிகழ்ச்சியில், துணை நீதிபதியும், மாவட்ட சட்ட சேவைகள் ஆணையருமான அனுராதா கலந்துகொண்டு சட்டக் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு சட்ட நடைமுறைகள் மற்றும் சட்ட உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.தொடர்ந்து, இலவச சட்ட உதவி மையத்தின் செயல்பாடுகள் குறித்தும் எடுத்துரைத்தார்.இதையடுத்து, அரசியலமைப்பு தின விழிப்புணர்வுப் பேரணியை துணை நீதிபதி அனுராதா கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். சட்டக் கல்லூரியில் இருந்து புறப்பட்ட பேரணி, ஈரோடு சாலையின் முக்கியப் பகுதிகள் வழியாகச் சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியது.இந்தப் பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள், “சாதி, மதம் கடந்து சமத்துவ இந்தியாவை உருவாக்குவோம்”, “அரசியலமைப்பு நாட்டின் வழிகாட்டி”, “வேற்றுமையில் ஒற்றுமை இந்தியாவின் பெருமை”, “சட்டம் அனைவருக்கும் ஒன்று, நீதி அனைவருக்கும் வேண்டும்”, “அம்பேத்கர் கனவை நனவாக்குவோம், அரசியலமைப்பைப் பாதுகாப்போம்” உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர்.மேலும், அரசியலமைப்புச் சட்டத்தின் முக்கியத்துவம், ஜனநாயக விழுமியங்கள் மற்றும் குடிமக்களின் கடமைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Leave a Reply