JJTVNEWSTAMIL

தமிழால் இணைவோம் வாழ்க தமிழ்

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் நள்ளிரவு நேரத்தில் தூங்கியவர்கள் எழுப்பப்பட்டு சுத்தம் செய்யப்படுவதால்நோயாளிகளின் உறவினர்களுக்கு கடும் அவதி

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் நள்ளிரவு நேரத்தில் தூங்கியவர்கள் எழுப்பப்பட்டு சுத்தம் செய்யப்படுவதால்நோயாளிகளின் உறவினர்களுக்கு கடும் அவதிநாகர்கோயில் அக் –31,கன்னியாகுமரி மாவட்டம், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், நோயாளிகளுடன் தங்கியிருந்த உறவினர்கள் ஓய்வெடுக்கும் இடத்தை இரவு 10.30 மணியளவில் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்ததாகப் புகார் எழுந்துள்ளது.அப்போது அந்த இடத்தில் தூங்கிக் கொண்டிருந்த முதியவர்கள் முதல் சிறு குழந்தைகள் வரை அனைவரையும் எழுப்பிவிட்டு சுத்தம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்கனவே நோயாளிகளைப் பராமரித்து வரும் உறவினர்கள் கடும் சிரமத்திற்கும் அவதிக்கும் ஆளாகினர்.பொதுவாக நோயாளிகளின் உறவினர்கள் இரவு நேரத்தில் ஓய்வெடுக்கும் இடத்தை, இரவு 10.30 மணிக்குத்தான் சுத்தம் செய்ய வேண்டுமா? பகல் நேரத்திலோ அல்லது நோயாளிகளுக்கும் உறவினர்களுக்கும் இடையூறு ஏற்படாத நேரத்திலோ இந்தப் பணியை மேற்கொள்ள முடியாதா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
மேலும், இரவு நேரத்தில் இவ்வாறு சுத்தம் செய்ய மருத்துவமனை நிர்வாகம் உத்தரவிட்டதா அல்லது பணியாளர்களின் சொந்த முடிவா என்பதையும் தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்து ஏற்கனவே பல்வேறு புகார்கள் வெளியாகி வரும் நிலையில், தற்போது இந்தச் சம்பவமும் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.எனவே, மருத்துவக் கல்லூரி முதல்வரும், மாவட்ட ஆட்சியரும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி, இனிவரும் காலங்களில் நோயாளிகளின் உறவினர்களுக்கு இதுபோன்ற இடையூறுகள் ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நோயாளிகளின் உறவினர்களுக்கு ஓய்வெடுக்கக்கூட உரிய நேரமும் இடமும் கிடைக்காத நிலை ஏன்? மருத்துவமனை நிர்வாகமும், தமிழக சுகாதாரத் துறையும் இதற்கு என்ன பதில் சொல்லப் போகின்றன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *