JJTVNEWSTAMIL

தமிழால் இணைவோம் வாழ்க தமிழ்

டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பெண்கள்

தேர்தல் முடிவுக்குப் பின் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் மட்டும் இன்று வரை 5 மதுபான கடைகள் மக்களின் போராட்டங்களால் மூடப்பட்டுள்ளது 15 வருடங்களுக்கு மேலாக ஏங்கி வந்த மதுபான கடைகள் தொடர்ந்து மக்களின் போராட்டங்களால் மூடப்பட்டு வருகிறது
இதனைத் தொடர்ந்து
வரதராஜன் பேட்டை பேரூராட்சியில் இயங்கி வந்த டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பெண்கள்

பொதுமக்களின் தொடர் போராட்டத்தை அடுத்து டாஸ்மாக் கடையை மூட அதிகாரிகள் உத்தரவு

பொதுமக்களின் தொடர் போராட்டத்தின் காரணமாக ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் எட்டாவது டாஸ்மாக் கடை மூடப்பட்டது

அரியலூர் மாவட்டம் வரதராஜன் பேட்டை பேரூராட்சியில் உள்ள டாஸ்மாக் கடையால் பள்ளி மாணவ மாணவிகள், பெண்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களின் குடும்ப வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளதாகவும் இளம் வயதிலேயே இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாவதாகவும் குற்றம் சாட்டி வரதராஜன் பேட்டை பேரூராட்சியில் உள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என கடந்த மாதம் 22ஆம் தேதி அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் 20 நாட்களுக்குள் டாஸ்மாக் கடையை மூட நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்நிலையில் டாஸ்மாக் கடையை மூட அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்றே கடையை மூட வேண்டும் என பெண்கள் ஆர்ப்பாட்டத்தை தீவிரப்படுத்தி வந்த நிலையில் அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வி அடைந்தது. இதனையடுத்து அப்பகுதி முக்கிய பிரமுகர்களுடன் டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் போலீசார் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இன்றே கடையை மூட வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தியதால் வேறு வழியின்றி டாஸ்மாக் கடையை மூட அதிகாரிகள் சம்மதித்து டாஸ்மாக் கடை மூடப்பட்டது. கடை மூடப்பட்டதை கொண்டாடும் விதமாக பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்தனர்

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் பொதுமக்களின் தொடர் போராட்டத்தின் காரணமாக எட்டாவது டாஸ்மாக் கடை மூடப்பட்டுள்ளது

இந்நிலையில் டாஸ்மாக் கடையை மூடக்கூடாது என வலியுறுத்தி என்று காலையில் அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட ஆண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *