JJTVNEWSTAMIL

தமிழால் இணைவோம் வாழ்க தமிழ்

தெருநாய்கள் தொல்லை… குப்பைகளால் சுகாதாரச் சீர்கேடு!அதிகாரிகளின் அலட்சியமே காரணமா? – நாகர்கோவில் மக்கள் கேள்வி!

தெருநாய்கள் தொல்லை… குப்பைகளால் சுகாதாரச் சீர்கேடு!
அதிகாரிகளின் அலட்சியமே காரணமா? – நாகர்கோவில் மக்கள் கேள்வி!நாகர்கோவில் – அக் – 31,கன்னியாகுமரி மாவட்டம்நாகர்கோவில் மாநகரப் பகுதிகளில் சாலைகளில் குப்பைகள் சிதறிக் கிடப்பதும், அவற்றைத் தெருநாய்கள் கிளறி உணவுகளைத் தேடி மேய்வதும் வாடிக்கையாகி வருகிறது. இதனால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதுடன், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் உயிருக்கும் அச்சுறுத்தல் உருவாகி வருகிறது.தூய்மைப் பணியாளர்களை அவர்களுக்குரிய தூய்மைப் பணிகளில் ஈடுபடுத்துவதற்குப் பதிலாக, உயர் அதிகாரிகளின் வீடுகளில் துணி துவைப்பது, சமையல் செய்வது உள்ளிட்ட சொந்தப் பணிகளுக்குப் பயன்படுத்துவதாகவும் புகார்கள் எழுகின்றன. இதுபோன்ற செயல்பாடுகள் உண்மையாக இருந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாநகரின் தூய்மைப் பணிகளை முறையாகக் கண்காணிக்கத் தவறும் அதிகாரிகளைப் பொறுப்பேற்கச் செய்து, அலட்சியமாகச் செயல்படுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.ஜோசப் விஜய் தலைமையிலான ஆட்சியிலாவது இத்தகைய அவலநிலை மாறி, நாகர்கோவில் மாநகரம் தூய்மையான, பாதுகாப்பான நகரமாக மாற வேண்டும் என நாகர்கோவில் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *