செயின் பறிப்பில் ஈடுபட்ட திருடர்களை பின் தொடர்ந்து பிடித்த பொதுமக்கள்: நேரில் அழைத்து பாராட்டி, சான்றிதழ் வழங்கி ஊக்குவித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே புது வேட்டைக்குடி கிராமத்தை சேர்ந்த பாப்பாத்தி என்ற மூதாட்டியிடம் குடிக்க தண்ணீர் கேட்பது போல கேட்டு, நடித்து அவர் அணிந்திருந்த மூன்று சவரன் தங்க நகைகளை, திருடர்கள் இருவர் பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தின் மூலம் தப்பிச் சென்றனர்.ஏறக்குறைய 15 கிலோமீட்டர் தூரம் அவர்களை பின் தொடர்ந்து அலைபேசி மூலம் தங்களது நண்பர்கள், உறவினர்கள் என அனைவருக்கும் திருடர்கள் பயணிக்கும் சாலையை குறிப்பிட்டு பிடிக்குமாறு எச்சரித்துக் கொண்டே இளைஞர்கள் பின் தொடர்ந்து வந்தனர்.அரியலூர் மாவட்டம் பழைய திருச்சி-தஞ்சை சாலையில் நிர்மலா பள்ளி அருகே வந்த பொழுது, டிராக்டர் பழுது பார்க்கும் மெக்கானிக் ஆறுமுகம் என்பவர் இரும்பு ராடு ஒன்றை எடுத்து, திருடர்கள் தப்பி சென்ற வாகனத்தை தாக்கியதில் நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர்.சாரதி என்ற திருடனை பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்து நிலையில் 16 வயது சிறுவனான தீபன் ராஜை ( பெயர் மாற்றிக் கொள்ளவும் ) அருகிலிருந்த, சித்தேரிக்குள் நுழைந்து புதரில் ஒன்றில் மறைந்து கொண்டான்.ஏறக்குறைய ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு பொதுமக்களுடன் இணைந்து காவல்துறை அவனையும் பிடித்து கைது செய்து, நகையை மீட்டனர்.இதனை எடுத்து விசாரணையில் கரூர் மாவட்டம் வெள்ளியணை அருகே உள்ள வெங்கடாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சாரதி மீது ஏற்கனவே திருட்டுவதற்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.மேலும் இவர்கள் ஒட்டி வந்த வாகனமும் திருட்டு வாகனம் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், மூதாட்டியின் செயினை பறித்த உடனேயே சமயோசிதமாக யோசித்து ஏறக்குறைய 15 கிலோமீட்டர் தொலைத்து வந்த இளைஞர்கள் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் இன்று நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழ் வழங்கி ஊக்கப்படுத்தினார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்…செயின் பறிப்பில் ஈடுபட்டு கைதான சாரதி மீது அரியலூர், திண்டுக்கல், புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஏறக்குறைய 14-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவித்தார்.மேலும் இந்த செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்றவுடன், இளைஞர்கள் தாமாக பின் தொடர்ந்து வந்து திருடனை நண்பர்கள் மூலம் பிடிப்பதற்கு உதவிகரமாக இருந்தது பாராட்டுக்குரியது என தெரிவித்தார்.மேலும், அரியலூர் மாவட்டத்தில் தனியாக உள்ள மூத்த குடிமக்களின் வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு தேவைப்படும் பட்சத்தில், காவல்துறையை அவர்கள் அணுகலாம் எனவும், தினசரி அவர்கள் இருக்கும் பகுதியை காவல் ரோந்து பணி செய்து பொதுமக்களுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்வது அரியலூர் காவல்துறை தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது என தெரிவித்தார்..அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் நேற்று 6 கிலோ கஞ்சா பிடிக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் கஞ்சா பயன்படுத்துவர்கள் எண்ணிக்கை குறைவு. வெளி மாவட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்காக அரியலூர் வந்தபோது அவர்களை குறிவைத்து பிடித்துள்ளோம்.அரியலூர் மாவட்ட த்தில் போதைப்பொருள் இல்லாத நிலையை உருவாக்க, மாவட்ட காவல்துறை தொடர்ந்து பணியாற்றி வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Leave a Reply