
பெரியகுளத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை முன்னிட்டு அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி மற்றும் இளைஞர்கள் பொதுமக்கள் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை முன்னிட்டு தேனி மாவட்டம் பெரியகுளம் மதுரை சாலையில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு வண்ணம் பூசப்பட்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பல்வேறு கட்சித் தலைவர்கள் அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் இன்று காலை முதல் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்அதனைத் தொடர்ந்து இரவு அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி மற்றும் அழகர்சாமிபுரம் கோட்டை தெருவு தெற்கு தெரு கள்ளிப்பட்டி கைலாச பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் திரு உருவப் படத்தை வாகனத்தில் வைத்து இளைஞர்கள் பொதுமக்கள் வானவேடிக்கை மேளதாளத்துடன் பெரியகுளம் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்மேலும் மாணவர்கள் சிலம்பம் சுற்றியும் ஆட்டம் பாட்டத்துடன் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜையை கொண்டாடினர்

Leave a Reply