JJTVNEWSTAMIL

தமிழால் இணைவோம் வாழ்க தமிழ்

தில்லையாடி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது பூம்புகார் எம்எல்ஏ பங்கேற்பு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது பொதுமக்கள் மனுக்கள் அளித்தனர்.

தில்லையாடி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது பூம்புகார் எம்எல்ஏ பங்கேற்பு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது பொதுமக்கள் மனுக்கள் அளித்தனர்.மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா தில்லையாடி ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் அவர்கள் தலைமையில் பொதுநல சங்க கட்டிடத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது இதில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் பங்கேற்று சிறப்புரையாற்றினார் மேலும் பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் பங்கேற்று பேசினார் இதில் வருவாய் துறை சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் புனித வெள்ளி , சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் பாலமுருகன் , வட்டாட்சியர் ஹரிதரன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலர் திருமுருகன் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி, சுகாதாரத்துறை சார்பில் வட்டார மருத்துவ அலுவலர் அரவிந்த்நாதன் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வெங்கடேசன், வேளாண்மை துறை தோட்டக்கலைத்துறை மற்றும் தீயணைப்பு துறை சார்பில் நிலைய அலுவலர் அருண்மொழி , உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் .பேசும்போது ஊராட்சியில் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் எனவும் ஆர்வத்துடன் பொதுமக்கள் பங்கேற்றதற்கு நன்றி தெரிவித்தார் நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு இலவச பட்டா, முதியோர் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை, வேளாண் இடுபொருள்கள் விதைகள் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது மேலும் முகாமில் பங்கேற்ற பொதுமக்கள் தங்கள் கோரிக்கை சார்ந்த மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர் மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்றுக் கொண்டார் அனைத்து மனுக்களுக்கும் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *