
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கன்னியாகுமரி மாவட்ட பிரிவு அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதாப்,
நேரில் பார்வையிட்டு ஆய்வுநாகர்கோவில் – நவ 25,கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில் -நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் ரூ.13.50 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் கூடைப்பந்து மைதானம் சீரமைக்கும் பணிகளையும், ரூ.40.00 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் பளு தூக்கும் மைதானம் சீரமைக்கும் பணிகளையும், ரூ.8.50 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் உடற்பயிற்சி கூட கழிவறை சீரமைக்கும் பணிகளையும், ரூ.33.00 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் நீச்சல் குளம் சீரமைக்கும் பணிகளையும், ரூ.21.00 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் தடகள பளுதூக்கும் பயிற்சி கூடம் சீரமைக்கும் பணிகளையும், ரூ.37.00 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் விளையாட்டு மாணவிகள் விடுதி கழிப்பறை, சமையலறை மற்றும் கணினி அறை கட்டும் பணிகளயும், ரூ.38.00 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் பிரதான காட்சிக்கூடத்திற்கான மேடை கட்டுமானம், முகப்புத் தோற்றம், மேடையைச் சுற்றியுள்ள நீச்சல் குளம் மற்றும் நடைபாதை அமைக்கும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அனைத்து பணிகளையும் டிசம்பர் 2026 மாத இறுதிக்குள் முடிக்குமாறு துறை அலுவலர்களுக்கும் ஒப்பந்ததாரருக்கும் அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் தெரிவித்தார்கள்.நடைபெற்ற ஆய்வில் மாவட்ட விளையாட்டு நல அலுவலர் வினு, உதவி செயற்பொறியாளர்கள், அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Leave a Reply