JJTVNEWSTAMIL

தமிழால் இணைவோம் வாழ்க தமிழ்

இளையான்குடி பேரூராட்சியில் மழைநீர் சேகரிப்பு ஆய்வுக் கூட்டம்

இளையான்குடி பேரூராட்சியில் மழைநீர் சேகரிப்பு ஆய்வுக் கூட்டம்
சிவகங்கை நவ 27சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பேரூராட்சியில் மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர் வளப் பாதுகாப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் பேரூராட்சி செயல் அலுவலர் கவிதா தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் பேரூராட்சி தலைவர் நஜீமுதின்
துணைத் தலைவர், பேரூராட்சி கவுன்சிலர்கள், பொதுமக்கள், அலுவலர்கள் மற்றும் சமூக ஆர்வலர் அப்துல் மாலிக் ஆகியோர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் மழைநீர் சேகரிப்பின் அவசியம், வீடுகள் மற்றும் பொது இடங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை முறையாகப் பராமரித்தல், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துதல், நீர் பற்றாக்குறையைத் தவிர்த்தல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விரிவாக ஆய்வு செய்து ஆலோசிக்கப்பட்டது.சமூக ஆர்வலர் அப்துல் மாலிக் அவர்கள் மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரை ஆற்றினார். மழைநீரை வீணாக்காமல் சேமிப்பதன் மூலம் எதிர்கால குடிநீர் தேவைக்கும், விவசாயத்திற்கும், நிலத்தடி நீர் வளத்தை மேம்படுத்துவதற்கும் உதவ முடியும் என்பதை எடுத்துரைத்தார்.மழைநீர் சேகரிப்பு என்பது அரசின் திட்டமாக மட்டுமல்லாமல், ஒவ்வொரு பொதுமக்களும் தங்களது வீடுகளிலும் சுற்றுப்புறங்களிலும் கடைப்பிடிக்க வேண்டிய பொறுப்பாகும். இன்றைய சிறிய முயற்சிகள் நாளைய பெரிய நீர் வளப் பாதுகாப்பிற்கு அடித்தளமாக அமையும்.இளையான்குடி பேரூராட்சியில் நீர் வளத்தைப் பாதுகாக்கும் நோக்கில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டம், பொதுமக்களிடையே நீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு சிறப்பான முயற்சியாகும்.மழைநீரை சேமிப்போம்! நிலத்தடி நீரை உயர்த்துவோம்! நீர் வளத்தைப் பாதுகாத்து எதிர்கால தலைமுறைக்கு வளமான வாழ்வை வழங்குவோம் என வலியுறுத்தி பேசப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *