
வருசநாடு அருகே காட்டு ஆமணக்கு விதை சாப்பிட்ட 12 பள்ளி குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிதேனி மாவட்டம் வருசநாடு அருகே காட்டு ஆமணக்கு விதைகளைச் சாப்பிட்ட அரசுப் பள்ளி குழந்தைகள் 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2 குழந்தைகளுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.தேனி மாவட்டம் வருசநாடு அருகே மஞ்சனூத்து மலைக் கிராமத்தில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. சாலை, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத இந்தப் பள்ளியில் மஞ்சனூத்து, ஒட்டுக்கல், திருப்பூர் ஆகிய மலைக் கிராமங்களைச் சேர்ந்த 18 குழந்தைகள் படித்து வருகின்றனர்.
நேற்று மதியம் மலைப்பகுதியில் விளைந்திருந்த காட்டு ஆமணக்கு விதைகளைக் குழந்தைகள் சிலர் விளையாட்டாகச் சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது. பள்ளி முடிந்து வீடு சென்ற குழந்தைகளில் சிலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதையடுத்து, ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 2 குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இன்று காலை பள்ளிக்கு வந்த மேலும் 10 குழந்தைகளுக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில், பள்ளிச் சீருடையுடனேயே ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.இந்தச் சம்பவம் குறித்துக் கல்வித்துறை அதிகாரிகளும், காவல்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply